Published:Updated:

`1 மில்லியன் லைக்ஸ்;13 மில்லியன் வியூஸ்' - மெர்சல் ரெக்கார்டை உடைத்த சர்கார் டீஸர்!

வருண்.நா

விஜய்யின் முந்தைய படமான மெர்சல் டீஸரின் சாதனைகள் அதன் பிறகு வெளியான எந்த ஒரு பெரிய படத்தின் டீஸரும் முறியடிக்கவில்லை. அந்தச் சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது தற்போது சர்கார் டீஸர்தான். 

`1 மில்லியன் லைக்ஸ்;13 மில்லியன் வியூஸ்' - மெர்சல் ரெக்கார்டை உடைத்த சர்கார் டீஸர்!
`1 மில்லியன் லைக்ஸ்;13 மில்லியன் வியூஸ்' - மெர்சல் ரெக்கார்டை உடைத்த சர்கார் டீஸர்!

``ரா ரா ரா... ராட்சஸ புகழ் ஒன்று எழுந்து நிற்கும்; 

ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்''

- இது `சர்கார்' அறிமுகப் பாடலில் வரும் வரிகள். இங்கு ஒலிக்கும் பெயர் - சர்கார், அரங்கம் - யூடியூப் என எடுத்துக்கொண்டால் ராட்சஸ புகழ் என்பது சர்கார் டீஸர் யூடியூபில் செய்த உலக சாதனையாக இருக்கும். ஆம்! டீஸர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் அரங்கையே அதிர வைத்துவிட்டனர் விஜய் ரசிகர்கள். இதுதவிர ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் `சர்கார்' எதிரொலித்தது. `சர்கார்' டீஸர் எந்தெந்தத் தளங்களில் எவ்வாறெல்லாம் ட்ரெண்ட் ஆனது என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

யூடியூப்

டீஸர் வெளியான 1 செகண்டில் 7,200 லைக்குகளைப் பெற்றது. அதன் பிறகு லைக்குகள் அப்டேட் ஆவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என ட்வீட் ஒன்றை பதிவிட்டது சன் பிக்சர்ஸ். சில மணி நேரங்கள் கழித்தே இது சரி செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து யூடியூபில் முதன்முதலாக 10 லட்சம் லைக்குகளை அள்ளிய டீஸர் மெர்சல் படத்தின் டீஸர்தான். அதன்பிறகு வெளியான சில இந்திப் படங்களின் டீஸர்கள் இந்த சாதனையை எட்டின. 

3 வாரங்களுக்கு முன் வெளியான 'தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்' படத்தின் டீஸர் 5 நாள்களில் 10 லட்சம் லைக்குகளை எட்டியது. சர்கார் டீஸரோ வெறும் 5 மணி நேரத்தில் இந்தச் சாதனையை முறியடித்துவிட்டது. உலக அளவில் மிகக் குறைந்த காலத்தில் 10 லட்சம் லைக்குகளை அள்ளிய டீஸர் என்ற சாதனையைப் படைத்துள்ளது சர்கார் டீஸர். வெளியான 10 நிமிடத்தில் 10 லட்சம் பேர் பார்வையிட்டிருந்தனர். ஐந்தரை மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்வையிட்டு மேலும் ஒரு சாதனையை தன்வசம் கொண்டுவந்தது `சர்கார்' டீஸர். 

கூகுள் ட்ரெண்ட்ஸ்

நேற்று ஒருநாளில் மட்டும், 'சர்கார் டீஸர்' என்று கூகுளில் சுமார் 2 லட்சம் பேர் தேடியுள்ளனர். 'சர்கார்' என்று 50,000 பேர் தேடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சர்கார் டீஸரை அதிகம் தேடிய மாநிலங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. தமிழகத்தில், கோயம்புத்தூர், நாகர்கோவில் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அதிகம் தேடியுள்ளனர். உலக அளவில், இலங்கை, இந்தியா, கத்தார் ஆகிய இடங்களில் அதிகம் தேடப்பட்டுள்ளது. 'சர்கார் டீஸர் ஃப்ரீ டவுன்லோட்', 'சர்கார் டீஸர் சன் பிக்சர்ஸ்'  ஆகியவை குறித்து அதிகம் தேடியுள்ளனர். 

ட்விட்டர்

நேற்று காலையிலிருந்தே #SarkarTeaserDay என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது. டீஸர் வெளியான சில மணி நேரங்களில் #SarkarTeaser என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர் விஜய் ரசிகர்கள். ஐந்தரை மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்குகளை யூடியூபில் அள்ளியதும்  #Fastest1MillionLikesForSarkarTeaser  என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. நேற்று முழுவதும் ட்விட்டரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை சர்காராகவே இருந்தது. 
 

ஃபேஸ்புக்

சர்கார்... சர்கார்... சர்கார் என ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் முழுவதும் நிரம்பி வழிந்ததைக் காணமுடிந்தது. பல மீம்ஸ்களைப் போட்டு ஃபேஸ்புக்கை மிரள வைத்தனர். முன்பெல்லாம் ரஜினி பட டீஸர் சாதனைகளை அஜித் பட டீஸர்கள் முறியடிப்பதும், பின்னர் அதை விஜய் படங்கள் முறியடிப்பதுமாக இருந்தது. இது சுழற்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால், விஜய்யின் முந்தைய படமான மெர்சல் டீஸரின் சாதனைகளை அதன் பிறகு வெளியான எந்த ஒரு பெரிய படத்தின் டீஸரும் முறியடிக்கவில்லை. அந்தச் சாதனைகளை அனைத்தையும் முறியடித்தது தற்போது சர்கார் டீஸர்தான்.