Published:Updated:

2018-ன் நம்பர் ஒன் இந்திய திரைநட்சத்திரம் யார்? - டாப் 10 பட்டியலை வெளியிட்டது IMDb

ம.காசி விஸ்வநாதன்
2018-ன் நம்பர் ஒன் இந்திய திரைநட்சத்திரம் யார்? - டாப் 10 பட்டியலை வெளியிட்டது IMDb
2018-ன் நம்பர் ஒன் இந்திய திரைநட்சத்திரம் யார்? - டாப் 10 பட்டியலை வெளியிட்டது IMDb

பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான IMDb 2018-ன் டாப் 10 இந்திய திரைநட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்டார்மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும்.

இந்த டாப் 10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் என அனைத்து முக்கிய நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். இவர் நடித்து வெளிவந்த `பத்மாவத்' சந்தித்த சர்ச்சையும் அதன்பின் அது பெற்ற வெற்றியும்தான் இதற்குக் காரணம். மேலும், இந்த வருடம் பல முக்கியமான படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த ராதிகா ஆப்தேவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

டாப் 10 பட்டியல்

1. தீபிகா படுகோன் 
2. ஷாரூக் கான் 
3. அமீர் கான்
4. ஐஸ்வர்யா ராய் பச்சன் 
5. சல்மான் கான்
6. கத்ரீனா கைஃப் 
7. குப்ரா சேட்
8. இர்ஃபான் கான்  
9. ராதிகா ஆப்தே 
10. அக்ஷய் குமார்

IMDb நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான கால் நீதம் தற்போது தங்கள் தளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய படங்கள் பற்றிய பக்கங்கள் இருப்பதாகவும், 70% பயன்பாடு இந்தியாவில் இருந்துதான் வருகிறதென்றும் தெரிவித்தார். ஏற்கெனவே இந்த வருடத்தின் தொடக்கத்தில் டாப் 10 இந்திய படங்களின் பட்டியல் ஒன்றை IMDb வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.