Published:Updated:

சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா

உ. சுதர்சன் காந்தி.
சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா
சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா

'கூடல் நகர்' படத்தின்மூலம் அறிமுக இயக்குநராக தமிழ்த் திரையுலகில் கால் பதித்தவர், சீனு ராமசாமி. பின், 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர் பறவை', 'தர்மதுரை' போன்ற ஹிட் படங்களை இயக்கி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். இவர், 'தர்மதுரை' படத்துக்குப் பிறகு, விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால், இவர் இயக்கவிருக்கும் படத்துக்கு கால்ஷீட் பிரச்னை வந்துள்ளது.

அதனால், அந்த இடைவெளியில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் சீனு ராமசாமி. இந்தப் படத்தில், நடிகர் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்கு 'ஒரு ஜீவன் அழைத்தது' என்று பெயர் வைத்துள்ளனர். திருச்சியைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்குமென்றும் இந்தப் படத்தில், அதர்வா கல்லூரி மாணவராக நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றபடி, இந்தப் படத்துக்கு கதாநாயகி, மற்ற நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், விஜய் சேதுபதியை இயக்குவார் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.