Published:Updated:

உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

ப.தினேஷ்குமார்
உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன், கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் `புகழேந்தி என்னும் நான்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த 18-ம் தேதி புதுக்கோட்டைக்கு வந்தார். தொடர்ந்து அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வந்தன. இன்று அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படமாகவில்லை. காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். அதனால், மதியம் 1 மணியளவில் தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். அங்குதான் அவர் தனது மதிய உணவை உட்கொண்டார்.

இதற்கிடையில், திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகப் புதுக்கோட்டை முத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மகேந்திரனுக்கு நெருக்கமானவர்களைத் தொடர்புகொண்டபோது, "தற்போது, ஐ.சி.யு பிரிவில் இருக்கிறார். அவருக்கு ஒன்றுமில்லை. நலமாக இருக்கிறார்" என்று கூறினர்.