Published:Updated:

 'காளி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உ. சுதர்சன் காந்தி.
 'காளி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
 'காளி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
 'காளி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

`வணக்கம் சென்னை' படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர், கிருத்திகா உதயநிதி. இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `காளி'. இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். மேலும், சுனைனா, அஞ்சலி ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான `அண்ணாதுரை' படம் சொல்லும்படி வெற்றியடையவில்லை. என்றாலும், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவுசெய்ய, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. 

ரஜினி படத்தின் பெயரை வைத்துள்ளதாலும் சிவப்பு நிறத் துண்டை வைத்து முகத்தை மூடிய நிலையில் இருப்பதுடன், அவரது லுக்கும் படத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 30-ம் தேதி படம் வெளியாகும் என ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. அதேசமயம், மார்ச் 29-ம் தேதி, விஷாலின் 'இரும்புத்திரை' படமும் மார்ச் 30-ம் தேதி ஆர்யா நடிக்கும் 'கஜினிகாந்த்' படமும் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.