Published:Updated:

`அவன் அழுகையில நாங்க சொக்கிப்போய் இருக்கோம்'- மகனால் பூரிப்படையும் அஞ்சனா

சு.சூர்யா கோமதி
`அவன் அழுகையில நாங்க சொக்கிப்போய் இருக்கோம்'- மகனால் பூரிப்படையும் அஞ்சனா
`அவன் அழுகையில நாங்க சொக்கிப்போய் இருக்கோம்'- மகனால் பூரிப்படையும் அஞ்சனா

ன் டி.வி-யில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருபவர் அஞ்சனா. தன்னுடைய அழகான பேச்சால், சார்மிங்கான ரியாக்‌ஷனால் ரசிகர்களைக் கவர்ந்தவர். `கயல்' படத்தில் நடித்த சந்திரனை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய்மைப் பூரிப்பில் இருக்கும் அஞ்சனாவைத் தொடர்புகொண்டேன்.

"அஞ்சனா இப்போ டபுள் ஹேப்பி. தாய்மை ரொம்ப அழகானதாகவும், நிறைய அன்பு நிறைஞ்சதாகவும் இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டேன். தாய்மை நேரத்தை அனுபவிக்க ஆரம்பிச்சேன். என் குடும்பம் என்னை கைல வைச்சு தாங்குனாங்க. 

சில மாசத்துக்கு முன்னாடி பையன் பிறந்தபோது, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி அவனுக்கு ருத்ராக்‌ஷ்னு பேர் வைச்சோம். அது, சிவனோட பேர். இப்போதைக்கு அவன்தான் எங்க உலகம். அவன் அழுகையில, சிரிப்பு, தூக்கத்துல நாங்க ரெண்டு பேரும் சொக்கிப்போய் இருக்கோம். அவன் மேல இப்போதைக்கு கேமரா வெளிச்சம் படக் கூடாதுங்கிறதுல நானும் சந்திரனும் ரொம்ப ரொம்பக் கவனமா இருக்கோம். கூடிய விரைவில் நாங்களே மீடியாவுக்கு எங்கள் செல்லத்தை அறிமுகப்படுத்தப்போறோம். அப்ப சொல்றேன் வாங்க. அதுவரை ப்ளீஸ் வெயிட்'' என்றார்.