Published:Updated:

``ஷாருக் கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்?" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்!#20YearsOfKKHH

சுஜிதா சென்
``ஷாருக் கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்?" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்!#20YearsOfKKHH
``ஷாருக் கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்?" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்!#20YearsOfKKHH

கடந்த 16-ம் தேதியன்று 'குச் குச் ஹோதா ஹே' படம் வெளியாகி 20 வருடங்கள் முடிந்திருந்தன. அந்நாளில், அப்படத்தில் நடித்த ஷாருக் கான், சல்மான் கான், கஜோல், ராணி முகர்ஜி, இயக்குநர் கரண் ஜோகர் ஆகியோர் மும்பையில், படத்தின் 20-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி அமைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், 'தான் எப்படி இப்படத்தில் கமிட்டாகி நடித்தார்' எனும் சுவாரஸ்யத்தை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொண்டார். ``ஒருநாள் கரண் என்னை பார்க்குறதுக்காக வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ நான் இல்லை, தங்கச்சி மட்டும்தான் வீட்ல இருந்தாள். கரண் என் தங்கச்சிகிட்ட, 'இது என்னோட முதல் படம். இப்படியொரு லவ் ஸ்டோரியை எழுதியிருக்கேன். உங்க அண்ணன் ஹீரோவா நடிச்சிட்டு இருக்கார். ஆனா, இந்தப் படத்துல ஷாருக்கான்தான் ஹீரோ. சல்மான் ஒரு கேமியோ ரோல்தான் பண்ணணும். இதுக்கு அவர் ஒப்புக்கொள்வாரா  தெரியலை. அவர்கிட்ட நான் வந்துட்டு போனதை சொல்லுங்க. அவர் ஹீரோ இல்லைங்கிறதையும் சொல்லுங்க. விருப்பம் இருந்தா சல்மான் என் படத்துல நடிக்கட்டும். அவரை நான் வற்புறுத்த விரும்பலை' என்று கூறியிருக்கிறார். 

வீட்டுக்கு வந்ததும் தங்கை அல்விரா, ``எனக்குக் கரண் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதைவிட அவரோட நேர்மை! கண்டிப்பா நீங்க எனக்காக இந்தப் படத்துல நடிக்கணும் அண்ணா'னு கூறினாள். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில நான் நிக்கிறேன் என்றால் அதற்கு அல்விராதான் காரணம்" என்று சல்மான் கூறியதும் அனைவரிடத்திலும் அப்படியொரு சந்தோஷம்.