Published:Updated:

`சர்கார்' டீசரில் இந்தக் குறியீடுகளை கவனிச்சீங்களா பாஸ்! #Sarkar

சக்தி தமிழ்ச்செல்வன்
`சர்கார்' டீசரில் இந்தக் குறியீடுகளை கவனிச்சீங்களா பாஸ்! #Sarkar
`சர்கார்' டீசரில் இந்தக் குறியீடுகளை கவனிச்சீங்களா பாஸ்! #Sarkar

`சர்கார்' டீசர் நேற்று வெளியான 10 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் அதைப் பார்த்துள்ளர். டீசர் பார்த்த மில்லியன் பேரும், ஒவ்வொரு குறியீடுகளை டீசரில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் இவை:

சிங்கிள் டிராக்காக 'ஒரு விரல் புரட்சி' பாடல் வெளியானபோதே அது எதைக் குறிக்கிறது என்ற விவாதங்கள் நெட்டிசன்களிடையே நிலவியது. படம் தேர்தலைப் பற்றிப் பேசுவதால் , நாம் ஓட்டுப்போட்டு மை வைக்கும் விரலைத் தான் 'ஒருவிரல் புரட்சி' எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது தெளிவாகி இருக்கிறது

மேலும், திருநெல்வேலியில் கந்துவட்டியால் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தை நினைவுபடுத்துவதாக, மூன்று பேர் எரியும் ஒரு காட்சியும் டீசரில் இடம் பெற்றிருந்தது. சென்ற தேர்தலின்போது பேசுபொருளாக இருந்து, தற்போதுவரை மர்மமாகவே இருப்பது கன்டெய்னர் பணம். திருப்பூரில் கன்டெய்னர் லாரியில் சிக்கிய 570 கோடி ரூபாய் பணம் பற்றி ஒரு சாட்டில் காட்டப்பட்டுள்ளது. மற்றுமொரு குறியீடாக, படத்தில் இளைஞர்கள் அனைவரும் ஒரே மாதிரியான டீ-சர்ட் அணிந்திருப்பார்கள். அந்த டீ-சர்ட்டில் இருக்கும் 'லோகோ', தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பினரின் 'லோகோ' போல் உள்ளதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.