Published:Updated:

``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது" - ஜனனி ஐயர்!

சுஜிதா சென்
``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது" - ஜனனி ஐயர்!
``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது" - ஜனனி ஐயர்!

`பிக் பாஸ்' ஜனனி ஐயர் தற்போது படங்களில் நடிக்க ஆர்வமாக கதை கேட்டு வருகிறார். பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் தான் நடித்த படங்களில் ஏற்பட்ட அனுபவத்தையும், இதற்கு பின்பு எப்படிப்பட்ட படங்களில் இவருக்கு நடிக்க விருப்பம் உள்ளது என்பதையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.  

``பாலா சார் மட்டும்தான் புதுசா நடிக்க வர்றவங்களுக்கு, நடிப்புச் சொல்லிக்கொடுத்து அவங்களை ஒரு நடிகனா மாத்துவார். அந்த வகையில பேபிமா கதாபாத்திரம்தான் என்னை ஒரு நடிகையா மாத்துச்சு. இந்த ஒரு கதாபாத்திரத்துக்காக மட்டும் அத்தனை டீடெயிலிங் பண்ணோம். ஒரு லோக்கல் போலீஸ் எப்படி இருப்பாங்க, எந்த மாதிரி பேசுவாங்கனு சொல்லிக்கொடுத்து நடிக்க வெச்சார். என்னை பாலா சார் ஆபீஸ்க்குக் கூப்பிட்டு, `நீங்க ஏதாவது பேசுங்க'னு சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியலை. என்ன பேசுறதுனும் தெரியலை. நான் சார்கிட்ட என்னைப் பத்திச் சொன்னேன். `சரி நீங்க கிளம்புங்க. உங்களுக்கு போன்ல தகவல் சொல்றேன்'னு அனுப்பிட்டார். `என்னை நடிக்கவே சொல்லலை, ஒருவேளை சாருக்கு என்னைப் பிடிக்கலையோ'னு நெனச்சேன். ரெண்டு நாளைக்கு அப்புறமா போன் பண்ணி, நீக்க செலக்ட் ஆகிட்டீங்க'னு சொன்னப்போ, என்னால நம்பவே முடியலை. என் வாழ்க்கையில இப்படியொரு கதாபாத்திரம் எனக்குக் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. இனிமேலும், பாலா சார் உருவாக்குன பேபிமா கதாபாத்திரம் மாதிரி இனி எனக்குக் கிடைக்காதுனு தெரியும். இருந்தாலும், செமயா பர்ஃபார்ம் பண்ற மாதிரியான யதார்த்தமான கதாபாத்திரத்துல நடிக்க ஆசை" என்று கூறினார் ஜனனி ஐயர்.