Published:Updated:

`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்!

சனா
`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்!
`நான் சமைக்கிறதைப் பார்த்து பயந்துடாதீங்க'- நடிகை வேதிகா செய்த டிஷ்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், 'காஞ்சனா 3'. இதில் ஹீரோயினாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், வசூல் ரீதியாக அதிக பணத்தை ஈட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை வேதிகா, சினிமா விகடன் யூ டியூப் சேனலில் அவருடைய ஃபேவரைட் உணவான மஸ்ரூம் வகை டிஷ் ஒன்றை சமைத்தார். சமையலுக்கு இடையே, அவரின் படங்கள்குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்தக் காணொலி, நமது சினிமா விகடன் யூ டியூப் சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இதோ.