Published:Updated:

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோ யார்?

உ. சுதர்சன் காந்தி.
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோ யார்?
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோ யார்?

'இது என்ன மாயம்' என்ற படத்தின்மூலம் தமிழுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தார். நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்த அவருக்கு, 'நடிகையர் திலகம்' படம் மிகப்பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது. இனி, தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, 'சர்கார்' படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.

நரேந்திரநாத் என்பவரின் இயக்கத்தில், ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமொன்றில் நடித்துவருகிறார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏக்கருக்கு செட் அமைக்கப்பட்டது. பின், போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படமொன்றில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை, 'பதாய் ஹோ' படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் என்பவரின் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், கீர்த்திசுரேஷ். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை புனேவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, தமிழில் எந்தப் படமும் கீர்த்தியின் கைவசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.