Published:Updated:

பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61

விகடன் விமர்சனக்குழு
பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61
பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61
பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது, விஜய் 61 #Vijay61

தெறி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் இன்னொரு படம் உருவாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ஜோதிகா, சமந்தா, வடிவேலு, சத்யராஜ் என்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கவிருக்கின்றனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. 

இது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமாகும். இது விஜய்யின் 61-வது படமாக இருக்கும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வட இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் படப்படிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கதாநாயகிகள், விஜய்-அட்லீ காம்போ என படத்தைப் பற்றிய அறிவிப்பிலேயே எதிர்பார்ப்பு மலையளவு உள்ளது. ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா அட்லீ..?!