Published:Updated:

'காற்று வெளியிடை' படத்தின் 'வான்...வருவான்...' பாடல் வரிகள்..!

விகடன் விமர்சனக்குழு
'காற்று வெளியிடை' படத்தின் 'வான்...வருவான்...' பாடல் வரிகள்..!
'காற்று வெளியிடை' படத்தின் 'வான்...வருவான்...' பாடல் வரிகள்..!
'காற்று வெளியிடை' படத்தின் 'வான்...வருவான்...' பாடல் வரிகள்..!

காற்று வெளியிடை படத்தின் வான் வருவான் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து தற்போது வெளியிட்டிருக்கிறார்.

’மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற எங்கள் கூட்டணி, கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது. 

மதித்தல் – புரிதல் – அன்பு செலுத்தல் - கலையை முன்னிட்டு மட்டும் கருத்துவாதம் நிகழ்த்தல் என்ற குணங்களால் பணியாற்றுகிறோம். எங்களால் இயன்ற அளவுக்குத் தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறோம். தமிழர்களின் வாழ்த்துக்கள் இன்னும் எங்களை வளரவைக்கும் என்று நம்புகிறோம். 

காற்று வெளியிடை எங்கள் கூட்டணியின் அடுத்த படைப்பு. கதாநாயகன் விமானம் ஓட்டியாய் இருப்பதனால் வான் என்ற சொல்லை வைத்துக் காதலில் விளையாடமுடியுமா என்று இயக்குநர் கேட்டார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். வாசிக்கவும் யோசிக்கவும் வரிகளைத் தருகிறேன். கானத்திற்காகச் சில நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா? நன்றி’.

பாடல் வரிகள்:
வான்
வருவான்
தொடுவான்
மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*    
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்
என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்
கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்

* * *