Published:Updated:

பெண்களின் படம் என்பதற்காக, வெளியிட அனுமதி அளிக்காத சென்சார் போர்டு

விகடன் விமர்சனக்குழு
பெண்களின் படம் என்பதற்காக, வெளியிட அனுமதி அளிக்காத சென்சார் போர்டு
பெண்களின் படம் என்பதற்காக, வெளியிட அனுமதி அளிக்காத சென்சார் போர்டு
பெண்களின் படம் என்பதற்காக, வெளியிட அனுமதி அளிக்காத சென்சார் போர்டு

அலாங்கிரித்தா ஸ்ரிவஸ்தவா இயக்கத்தில் , பிரகாஷ் ஜாவின் தயாரிப்பில் வெளிவரத் தயாராகக் காத்திருக்கிறது, `லிப் ஸ்டிக் அண்டர் மை புர்கா` என்ற ஹிந்திப் படம். மும்பையில் நடந்த திரைப்பட விழாவில், பாலின சமத்துவத்துக்கான சிறந்த படம் என்ற விருதை வாங்கியதால், பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியது. இது, தற்போது சென்சார் போர்டின் கெடுபிடியால் வெளியிடப்படாமல் இருக்கிறது. பாலியல் சார்ந்த காட்சிகளைக் கொண்டிருப்பதாலும், பாலியல் ரீதிரான வசனங்கள் அதிகம் இருப்பதாலும்தான் இந்தப் படம் வெளியிடப்படாமல் இருக்கிறது என்று சென்சார் போர்டு கூறியுள்ளது.

பெண்களின் படம் என்பதற்காக, வெளியிட அனுமதி அளிக்காத சென்சார் போர்டு

ஆனால் படத்தின் இயக்குநர் அலாங்கிரித்தா இதுகுறித்து ``இந்தப் படம் புர்காவில் இருக்கும், அதையே உலகமாகக் கொண்டு வாழும் நான்கு நடுத்தர குடும்பப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை.இது ஒரு பெண்ணியப் படம்.அதுவே இந்தப் படத்தை வெளியிடவிடாமல் இவர்களை செய்கிறது.நான் ஒரு கலைஞன், இந்தப் படம் வெளிவரும் வரை போராடுவேன்`` என்று கூறினார்.ஏற்கெனவே பிரகாஷ் ஜாவின் முந்தைய படத்திற்கும் இதே போன்ற பிரச்னை வந்தது குறிப்பிடத்தக்கது.