Published:Updated:

'கடம்பன்' பாடல்கள் வெளியாகின.. அசத்தும் ஆர்யா - யுவன் காம்போ..!!

சி.மீனாட்சி சுந்தரம்
'கடம்பன்' பாடல்கள் வெளியாகின.. அசத்தும் ஆர்யா - யுவன் காம்போ..!!
'கடம்பன்' பாடல்கள் வெளியாகின.. அசத்தும் ஆர்யா - யுவன் காம்போ..!!
'கடம்பன்' பாடல்கள் வெளியாகின.. அசத்தும் ஆர்யா - யுவன் காம்போ..!!

ஆர்யா, கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள 'கடம்பன்' திரைப்படப் பாடல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. ஆர்யாவின் முதல் படமான 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா, பத்தாவது முறையாக ஆர்யாவுடன் இத்திரைப்படம் மூலம் இணைகிறார்.

பட்டியல், சர்வம், அவன் இவன் என ஆர்யாவின் படங்களுக்குத் தரமான இசையமைத்து வெற்றிபெறச் செய்த யுவன் ஷங்கர் ராஜா 'கடம்பன்' படத்துக்கு ஐந்து பாடல்களை இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். சில நாள்களுக்கு முன்பு யுவன் - மதுமிதா பாடிய 'ஒத்த பார்வையில்' பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. ஐந்து பாடல்களும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக எழுதி இசையமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 'ஆகாத காலம்' பாடல் புலம் பெயர் மக்களின் துயரை எடுத்துரைக்கும் வண்ணம் இசையமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-14 தமிழ் புத்தாண்டு அன்று பவர் பாண்டி, சிவலிங்கா படங்களுடன் கடம்பன் வெளியாக உள்ளது.