Published:Updated:

மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி... ஆனா, ஒரு ட்விஸ்ட்!

நமது நிருபர்
மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி... ஆனா, ஒரு ட்விஸ்ட்!
மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி... ஆனா, ஒரு ட்விஸ்ட்!

டாடா சுமோவ பறக்கவிட்டு, அதுல பிஹெச்.டி பட்டம் வாங்கியவர், இயக்குநர் ஹரி. 'ஃபாஸ்ட் அண்டு ஃபியூரியஸ்' படத்துல வர்ற கார்களோட வேகத்தைவிட, இவர் டைரக்ட் பண்ண படத்தோட வேகம் எப்போதுமே கொஞ்சம் அதிகம்தான். 

மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி... ஆனா, ஒரு ட்விஸ்ட்!


 

ஹரி & சூர்யா கூட்டணி திரும்ப வரப்போகுதுனு  சொன்னாலே, 'சிங்கம் 4' வரப் போகுதுனுதான் பல பேர் நினைப்பாங்க. வரத்தான் போகுதுங்க! இப்போது ஹரி 'சாமி பார்ட் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவனோட 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும், செல்வராகவன் இயக்க உள்ள பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.  இரண்டு பேரும் அவங்க கமிட் ஆன படங்களை முடித்துவிட்டு,  மீண்டும் கூட்டணி வைக்கப்போறாங்க!

ஆனால் இந்தக் கூட்டணி, 'சிங்கம் - 4' படத்துக்காக இல்லை. சிங்கம் படத்தின்  பாதிப்பு இதுல துளியும் இருக்காதாம். ஆனால், இயக்குநர் ஹரியோட பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். 10 டாடா சுமோ பார்சல்!

-சனா பிர்தோஸ்