Published:Updated:

'முண்டாசுப்பட்டி' கூட்டணியின் 'மின்மினி'

சண்முகபாண்டியன்.தே
'முண்டாசுப்பட்டி' கூட்டணியின் 'மின்மினி'
'முண்டாசுப்பட்டி' கூட்டணியின் 'மின்மினி'

'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தை இயக்கிய ராமின் அடுத்த படத்துக்கு, 'மின்மினி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

'முண்டாசுப்பட்டி' கூட்டணியின் 'மின்மினி'

விஷ்ணு, நந்திதா, காளிவெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்து வெற்றிபெற்ற திரைப்படம், 'முண்டாசுப்பட்டி'. குறும்படத்தைத் தழுவி, இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, ராம்குமார் இயக்கும் அடுத்த படத்துக்கு, 'மின்மினி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு, முதலில் சின்ட்ரெல்லா எனப் பெயரிடப்படுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது 'மின்மினி' எனத் தலைப்பு வைத்துள்ளதாகப் படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு-ராம் கூட்டணி இதற்கு முன்னர் இணைந்த 'முண்டாசுப்பட்டி' திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படத்துக்கும் 'ம' வரிசையில் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜிப்ரான்  இசையமைக்க உள்ளார்.

- சனா பிர்தோஸ்