Published:Updated:

அடுத்த சிக்ஸருக்கு ரெடியாகும் வெங்கட் பிரபு!

சனா
அடுத்த சிக்ஸருக்கு ரெடியாகும் வெங்கட் பிரபு!
அடுத்த சிக்ஸருக்கு ரெடியாகும் வெங்கட் பிரபு!

இயக்குநர் வெங்கட் பிரபு, கிரிக்கெட் விளையாடி சிக்ஸர் அடிப்பாரோ இல்லையோ... நிச்சயமாக, கிரிக்கெட்டை கான்செப்ட்டாக வைத்துப் படமெடுத்து, அதில் சிக்ஸர் அடிச்சிடுவார். அந்த வகையில், வெங்கட் பிரபு தயாரிப்பில் வெளிவந்த 'சென்னை 28' படம் பட்டிதொட்டியெல்லாம் சிக்ஸர் அடிச்சது. அதனால், 'சென்னை 28' இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்தப் படமும் ரசிகர்களைக் கவர்ந்ததால், வெங்கட் பிரபு தன் அடுத்த புராஜெக்ட்டுக்கு ரெடியாகிவிட்டார்.

இவர் தயாரிப்பில் வரும் அடுத்த படத்தை, இவரின் சிஷ்யர் சரவண ராஜன் இயக்க உள்ளாராம். இவர், ஜெய்யை வைத்து 'வடகறி' படத்தைக் கொடுத்தவர். 'ஆர்.கே.நகர்' எனப் பெயரிட்டிருக்கும் வெங்கட் பிரபுவின் புதுப்படத்துக்கு இசையமைக்கப்போவது, வழக்கம்போல யுவன்சங்கர் ராஜா கிடையாதாம், தம்பி பிரேம்ஜிதான் இசை என்பது கூடுதல் தகவல். 'ஆர்.கே. நகர்'  படத்தின் ஹீரோவாக வைபவ் நடிக்கிறார். இந்தப்  படத்தின் அப்டேட் பற்றி வெங்கட் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.