Published:Updated:

''எனக்கு பட்டப் பெயர்கள் தேவையில்லை'' - சிவகார்த்திகேயன் பேச்சு!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
''எனக்கு பட்டப் பெயர்கள் தேவையில்லை'' - சிவகார்த்திகேயன் பேச்சு!
''எனக்கு பட்டப் பெயர்கள் தேவையில்லை'' - சிவகார்த்திகேயன் பேச்சு!


''பட்டப்பெயர்கள் எதுவும் தேவையில்லை'' என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

''எனக்கு பட்டப் பெயர்கள் தேவையில்லை'' - சிவகார்த்திகேயன் பேச்சு!


ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'என்னுடைய அப்பா நேர்மையான அரசு ஊழியராகப் பணியாற்றினார். அவரைப் பற்றி பிறர் பெருமையாக பேசக்கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'நக்கீரன்' கோபால் ஒருமுறை, என்னுடைய அப்பாவை பாராட்டிப் பேசினார்.

அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோலவே, சினிமாவுக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகள், மிகவும் எளிமையாக இருந்தது; ஆனால் அடுத்து வரும் ஆண்டுகளில், சினிமாத்துறை எனக்கு மிகவும் கடினமானதாகவே உள்ளது. மேலும் எனக்கு எந்தப் பட்டப் பெயர்களும் தேவையில்லை. நான் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன்' என்றார்.