Published:Updated:

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா!

சனா
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா!
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா!

'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', 'செம போத ஆகாத', 'இமைக்கா நொடிகள்' மற்றும் சில படங்களைக் கைவசம் வைத்திருக்கும் அதர்வா, அடுத்ததாக குளோபல் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். 


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ஜி.வி.பிரகாஷை வைத்து 'டார்லிங்' மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் ஆண்டன் படங்களில் நிச்சயமாக காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால், இந்தப் படத்திலும் காமெடிக்கு ஸ்கோப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதர்வா, குளோபல் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்த 'ஈட்டி' படத்தில், ஏற்கெனவே நடித்து ஹிட் கொடுத்ததால், இந்தப் படமும் ஹிட் கொடுக்கும் எனப் படக்குழுவினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. மேலும், சிம்பு நடிக்கும் 'AAA' மற்றும் ஜீவா நடிக்கும் 'கீ' திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆரம்பமாகிறது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படுமாம்.