Published:Updated:

'`` பெருமாள் பிச்சை கேரக்டரைவிட பத்து மடங்கு பெரிய வில்லன் நான்...!- சாமி-2 சீக்ரெட் உடைக்கும் பாபி சிம்ஹா!

சனா
'`` பெருமாள் பிச்சை கேரக்டரைவிட பத்து மடங்கு பெரிய வில்லன் நான்...!-  சாமி-2 சீக்ரெட் உடைக்கும் பாபி சிம்ஹா!
'`` பெருமாள் பிச்சை கேரக்டரைவிட பத்து மடங்கு பெரிய வில்லன் நான்...!- சாமி-2 சீக்ரெட் உடைக்கும் பாபி சிம்ஹா!

தன் படங்களில் வரும் கார்களின் வேகத்தைவிட தற்போது அதிக மடங்கு வேகத்தோடு `சாமி 2' படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஹரி. 

ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். புலி படத்துக்குப் பிறகு தமிழில் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

'சாமி' படத்தில் வில்லன் கதாபாத்திரமான பெருமாள் பிச்சையாக சீனிவாச ராவ் நடித்திருப்பார். அவரது அலட்டிக்கொள்ளாத வில்லன் பாத்திரம் இந்தப்  படத்தில் பெரிதும் பேசப்பட்டது. `சாமி 2' படத்தின் அப்டேட் நியூஸாக வில்லன் கதாபாத்திரத்தில்  பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டோம்.

 ``நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மைதான். டைரக்டர் ஹரி சொன்ன வில்லன் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. இந்த மாதிரி ஒரு வில்லனை தமிழ் சினிமாவில் இதுவரை நான் பார்த்தது இல்லை.  பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தைவிட பத்து மடங்கு பெரிய வில்லனாக இந்தப் படத்தில் என்னைப் பார்க்கலாம். அதை மட்டும் உறுதியா சொல்லிக்கிறேன்! படத்தில் என் பெயர் கூட வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆகஸ்ட்டில் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. அதற்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.'' என்று கூலாக முடித்தார் பாபி.