Published:Updated:

விஜய் பிறந்தநாளின் அதிரடித் தொடக்கம்: 'மெர்சல்' 2-வது போஸ்டர் வெளியானது!

தார்மிக் லீ
விஜய் பிறந்தநாளின் அதிரடித் தொடக்கம்: 'மெர்சல்' 2-வது போஸ்டர் வெளியானது!
விஜய் பிறந்தநாளின் அதிரடித் தொடக்கம்: 'மெர்சல்' 2-வது போஸ்டர் வெளியானது!

விஜய் பிறந்தநாளில் அதிரடியாக அவரது 'மெர்சல்' படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகிவருகிறது விஜய்யின் 61-வது படம். அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, யோகி பாபு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விஜய் பிறந்தநாளின் அதிரடித் தொடக்கம்: 'மெர்சல்' 2-வது போஸ்டர் வெளியானது!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் முதல் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகுந்து வரவேற்பைப் பெற்று வந்தது. அந்த போஸ்டரை வைத்து பல குறியீடுகளும், கருத்துகளும் வெளியான வண்ணம் இருந்தது. 'மெர்சல்' என்ற டைட்டிலின் ஸ்டைலில் ஆரம்பித்து, 'இளைய தளபதி'க்கு பதில் வெறும் 'தளபதி' என்று குறிப்பிட்டது வரை எல்லாக் கோணத்திலும் கேள்விகள் அனல் பறந்தன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணிக்கு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியிருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார்!