Published:Updated:

அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்!

குருபிரசாத்
அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்!
அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்!

உடல் பரிசோதனை செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்!


நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம், தனது ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். ரசிகர்கள் சந்திப்பு தொடங்கிய நாள் முதல் அவரின் சூசகமான அரசியல் பேச்சு பரபரப்பைக் கிளப்பியது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகின்றன. மேலும், தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் என்று அரசியல் கட்சித் தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
மேலும், நண்பர்களுடன் அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

அரசியல் பரபரப்புகளுக்கிடையே, ரஜினி 'காலா' படத்தில் நடிக்கிறார். 'கபாலி' டீம் மீண்டும் இணைந்துள்ளதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இதனால், படத்தின் பெயரை அறிவித்ததிலிருந்து, நடிகர், நடிகைகள் தேர்வு வரை அனைத்துமே வைரல் ஆகி வருகிறது. 'காலா' படபிடிப்புக்காக ரஜினி கடந்த வாரம் மும்பை சென்றுள்ளார்.

இந்நிலையில், மும்பையிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளார் ரஜினி. உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினி வட்டாரத்தில் விசாரித்தபோது, 'ரஜினிக்கு உடல்நிலை சீராகத்தான் உள்ளது. நார்மல் செக்-அப்பிற்காகத்தான் அமெரிக்கா செல்கிறார். அவர் இந்தியா திரும்பும் தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை' என்றனர்.