Published:Updated:

’காலா’ படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி.... சமுத்திரக்கனி பூரிப்பு!

சனா
’காலா’ படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி.... சமுத்திரக்கனி பூரிப்பு!
’காலா’ படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி.... சமுத்திரக்கனி பூரிப்பு!

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி-2, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியோடு காலா எனத் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் சமுத்திரக்கனி நடித்துவருகிறார். 'காலா' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனியிடம் காலா மற்றும் மகேஷிண்டே ப்ரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக் பற்றிய அப்டேட்களைத் தெரிந்துகொள்ள தொடர்புகொண்டோம். 

’காலா’ படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி.... சமுத்திரக்கனி பூரிப்பு!


''ரஜினியுடன் நடிக்கும் இந்தப் படத்தை மறக்கவே முடியாது. சினிமாவுக்காக ஊரைவிட்டு ஓடி வந்ததற்கு ஏதோ செஞ்சுட்டோம், ஏதோ ஒண்ணு நடந்துருக்குனு தோணுது. பெரும் மகிழ்ச்சி. ஆனா 'காலா' படத்தைப் பற்றி என்னால் எதுவும் சொல்லமுடியாது’’ என்று ஜாலியாக பேச ஆரம்பித்தார் சமுத்திரக்கனி. 


''ப்ரியதர்ஷன் சார் இயக்கத்தில் மோகன்லால் சாரோட மலையாளத்தில் ஒப்பம் படத்தில் நடித்தபோது ப்ரியன் சார் என்கிட்ட, பகத் பாசில் நடித்த 'மகேஷிண்டே ப்ரதிகாரம் ' படத்தைப் பார்க்கச் சொன்னார், நானும் பார்த்தேன். அப்போ ப்ரியன் சார், ’இந்தப் படத்தை தமிழில் எடுக்கலாம்னு இருக்கேன். யார் நடிச்சா நல்லாயிருக்கும்’னு கேட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்கு முன்பே இந்தப் பேச்சு இருந்துச்சு. அப்போதே இந்தப் படத்தில் ’நீயும் நடிக்கிற’னு ப்ரியன் சார் சொன்னார். அதுதான் இப்போது நடக்கப்போகுது. இந்தப் படத்தில் நான் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன்.  

’காலா’ படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி.... சமுத்திரக்கனி பூரிப்பு!


ராமுடைய பேரன்புக்காக அவருடைய `பேரன்பு’ படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். இந்தச் சமூகத்துக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் ராம் சொல்லியிருக்கார். நான் எத்தனையோ படங்களில் பல கதாபாத்திரங்கள் பண்ணியிருந்தாலும், என்னை எந்தப் படத்திலும் பார்க்காத ஒரு நகைச்சுவை நடிகரா 'விஐபி 2' படத்தில் பார்ப்பீங்க. என்னுடைய இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படம் பண்றதுக்குக் கதை ரெடியா இருக்கு. தெலுங்கில் நானியும் தமிழில் சசிகுமாரையும் நடிக்க வைக்க பேசிட்டுயிருக்கேன். இப்போதைக்கு இதுதான் என் ப்ளான்’’ என்று முடித்தார் சமுத்திரக்கனி.