Published:Updated:

'துப்பறிவாளன்' படத்தின் டீசர்..!

சனா
'துப்பறிவாளன்' படத்தின் டீசர்..!
'துப்பறிவாளன்' படத்தின் டீசர்..!

விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கியிருக்கும் திரைப்படம் 'துப்பறிவாளன்'. தமிழ் சினிமாவில் மிஷ்கின் தனது படங்களுக்கு எப்போதும் ஒரு தனிபாணியை கையாளுவார். திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மிஷ்கினின் 'துப்பறிவாளன்' படத்தில் விஷால், பிரசன்னா, வினய், பாக்யராஜ், ரகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா என பலர் நடித்துள்ளனர்.

அரோல் கொரேலி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை விஷால் தயாரித்திருக்கிறார். ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.