Published:Updated:

'நீங்க ஷட்-அப் பண்ணுங்க’ பாடலின் ரகசியம் சொல்லும் அருண்ராஜா காமராஜ்..!

சனா
'நீங்க ஷட்-அப் பண்ணுங்க’ பாடலின் ரகசியம் சொல்லும் அருண்ராஜா காமராஜ்..!
'நீங்க ஷட்-அப் பண்ணுங்க’ பாடலின் ரகசியம் சொல்லும் அருண்ராஜா காமராஜ்..!

சீரியல் பார்த்த பெண்களும் கிரிக்கெட் மேட்ச் பார்த்த ஆண்களும் தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள் மூழ்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களையும் பார்க்க வைத்துவிடுகிறது சமூக வலைதளங்களில் உலாவும் நிகழ்ச்சி பற்றிய மீம்ஸ். ஆனால், நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை எனக் கூறியுள்ளார் பாடகர் அருண்ராஜா காமராஜ்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாகிவிட்டனர். ஓவியாவை மையமாக வைத்து ஓவியா ஆன்தம் எனப் பலர் ரெடி செய்துகொண்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் சினிஸ் ட்விட்டரில், ’பிக் பாஸில் ஓவியா பயன்படுத்திய 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க' என்ற வார்த்தையை வைத்து 'பலூன் ' படத்தின் ப்ரோமோ பாடலை ரெடி செய்யப்போகிறேன்’ என்று கூறியிருந்தார். இந்தப் பாடலை எழுதியிருக்கும் அருண்ராஜா காமராஜிடம் பேசினோம்.

''பிக் பாஸ் நிகழ்ச்சி என்னை அடிமையாக்கிவிடுமோ என்ற ஒரு பயத்தால் நான் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. ஆனால், 'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஸ் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தீவிர ரசிகர். அவர் தவறாமல் பார்த்துவிடுவார். அவர்தான் படத்துக்கான ப்ரோமோ பாடலில் 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க' என்ற வார்த்தையை சேர்ப்போம் என்று கூறினார். நாங்கள் ப்ரோமோ பாடலை ஏற்கெனவே ரெடி பண்ணியிருந்தோம். ஆனால். 'பிக் பாஸ்' தாக்கத்துக்குப் பிறகு திரும்பவும் 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க' என்ற வார்த்தையை மையமாக வைத்துப் பாடலை ரெடி பண்ணினோம். விரைவில் வெளிவரும் இந்தப் பாடல் கண்டிப்பாக வைரலாகும்’’ என்றார்.