Published:Updated:

'ஆளப்போறான் தமிழன்' - நாளை 'மெர்சல்’ சிங்கிள் ட்ராக்..!

பிரேம் குமார் எஸ்.கே.
'ஆளப்போறான் தமிழன்' - நாளை 'மெர்சல்’ சிங்கிள் ட்ராக்..!
'ஆளப்போறான் தமிழன்' - நாளை 'மெர்சல்’ சிங்கிள் ட்ராக்..!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மெர்சல்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். 

’மெர்சல்’ படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி ரிலீஸாகும் நிலையில், ’ஆளப்போறான் தமிழன்’ என்கிற ஒரு பாடல் மட்டும் நாளை வெளியாக உள்ளது. இந்தப் பாடல் ரிலீஸுக்கான அறிவிப்பை ஒரு போஸ்ட்டரோடு வெளியிட்டிருக்கிறது படக்குழு. ’மெர்சல்’ பட போஸ்ட்டர்களில் 'இளையதளபதி' என்பது 'தளபதி' ஆக மாறியிருந்ததற்கு பலரும் அரசியல் சாயம் பூசினார்கள். தற்போது ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற வார்த்தையும் அரசியல் சார்ந்து இருப்பதால் இந்தப் பாடலுக்கும் பல விமர்சனங்கள் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.