Published:Updated:

மோகன் லால் படத்தில் இணையும் சல்மான் கானின் தம்பி!

தார்மிக் லீ

'ப்ரண்ட்ஸ்', 'காவலன்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' போன்ற சில படங்களை இயக்கியவர், சித்திக். தற்போது மோகன் லாலை வைத்து இயக்கும் 'பிக் ப்ரதர்' படத்தில், சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான் இணைந்திருக்கிறார்.

Mohanlal
Mohanlal

'ப்ரண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'காவலன்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' போன்ற சில படங்களை இயக்கியவர் சித்திக். தற்போது மோகன் லாலை வைத்து 'பிக் ப்ரதர்' எனும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான் மலையாள சினிமாவில் முதன்முறையாக என்ட்ரி கொடுக்கிறார்.

Arbaaz Khan - Mohan Lal - Siddique
Arbaaz Khan - Mohan Lal - Siddique

பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் சித்திக் இயக்கும் 'பிக் ப்ரதர்' படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு வருகை தருகிறார். இதன் கலந்துரையாடலுக்காக கேரளா வந்தடைந்தார், அர்பாஸ். இதை மகிழ்ச்சியுடன், 'சல்மான் கான் தம்பியான அர்பாஸ் கானை வரவேற்பதிலும் எங்களது படத்தில் இவர் நடிப்பதும் சந்தோஷம்' என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். பதிலுக்கு, 'மலையாள சினிமா லெஜண்ட் மோகன் லாலுடன் நடிக்கப்போவதும், சித்திக் போன்ற இயக்கத்தில் நடிப்பதும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. முதல் முறையாக 'பிக் ப்ரதர்' படம் மூலம் மலையாள சினிமாவிற்கு வருகை தருகிறேன். ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்கிறது' என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அர்பாஸ் கான்.