Published:Updated:

பயணம்... புத்தகம்... மரங்கள்... மகளின் பிறந்தநாளுக்கு இவ்வளவு சர்ப்ரைஸா? வாவ் அசின்!

அஸ்வினி.சி
பயணம்... புத்தகம்... மரங்கள்... மகளின் பிறந்தநாளுக்கு இவ்வளவு சர்ப்ரைஸா? வாவ் அசின்!
பயணம்... புத்தகம்... மரங்கள்... மகளின் பிறந்தநாளுக்கு இவ்வளவு சர்ப்ரைஸா? வாவ் அசின்!

நடிகை அசின், நேற்று தன் மகளின் முதல் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். அதுமட்டுமின்றி தன் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். 


 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அசின். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. திடீரென பாலிவுட் பக்கம் சென்ற அசின், அதன்பிறகு சினிமாவுக்கு பைபை சொல்லிவிட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு, தன் காதலரான மைக்ரோமேக்ஸ் நிறுவனர்  ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி நடந்தது. இதையடுத்து, 2017 -ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி, அசின் - ராகுல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.


 

இருவருமே சமூக வலைதளங்களில் குடும்ப வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களைப் பகிர மாட்டார்கள். முக்கியமாக, மகளின் புகைப்படத்தை இணையத்தில் பகிராமல் இருந்தார் அசின். இந்நிலையில் மகளின் முதல்பிறந்தநாளான நேற்று , குட்டி பாப்பாவின் பெயரையும் புகைப்படங்களையும்  வெளியிட்டிருக்கிறார்.


 

 `அரின்’. இதுதான் அசின் மகளின் பெயர். அசின்- ராகுல் பெயரில் எழுத்துக்களை எடுத்து, 'அரின்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.


 


அழகிய மாலைப் பொழுது... புல்வெளி படர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதி. முகப்பில்,  ‘Dream Big’ என்னும் வாசகத்துடன் ஒரு மரப்பலகை. உள்ளே பிங்க், கோல்டன், வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள்.


 

ஆங்காங்கே உத்வேக வாசகங்களைத் தாங்கி நிற்கும் மரப்பலகைகள். இதுதான் அரின் பிறந்தநாளின் செட்டப். மொத்தத்தில், ஒரு ஃபேன்ஸி பூங்காவுக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளனர் அசின் - ராகுல் தம்பதி.




 

குட்டிப் பாப்பா அரின், பயணம், மரங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் காதலியாம்.  அதனால்தான் இவ்வளவு அழகான செட்டப்பில் பிறந்தநாளை கொண்டாடி அசத்தியிருக்கிறார் அசின். அதுமட்டுமன்றி கேக் அருகில் ஓர் உலக உருண்டையை (Globe) வைத்து அதில் `இந்த உலகம் உன்னுடையது’ என்னும் வாக்கியத்தை தன் மகளுக்காக எழுதி வைத்திருக்கிறார். 



 

வெகுநாள்களாக அசினிடம் இருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை என்பதாலோ என்னவோ, அசின் தன் மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்த சில நொடிகளில், அவரின் ரசிகர்கள் அரினின் புகைப்படங்களை வைரலாக்கிவிட்டனர். வாழ்த்துகள் அரின். ஒன்று சொல்ல மறந்துவிட்டோம், இன்று அசினுக்கு பிறந்தநாள். வாழ்த்துகள் அசின்!