Published:Updated:

கடல் சீற்றத்தால் குமரியில் தொடரும் சேதங்கள்!

சிந்து ஆர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களும், தேங்காய்நார் உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளனர்.

கடல் சீற்றத்தால் குமரியில் தொடரும் சேதங்கள்!
கடல் சீற்றத்தால் குமரியில் தொடரும் சேதங்கள்!

ன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களும், தேங்காய்நார் உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் கிராமங்களில் கடல் நீர்புகுந்ததால் இழப்புகள் அதிகரித்து வருகின்றன. அழிக்கால் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவர்கள் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். குமரி மேற்கு மாவட்டத்தில் ராமன் துறை மீனவகிராமத்தில் 5 மீன்பிடி படகுகள் உடைந்து சேதமானது. முள்ளூர் துறையில் கடற்கரை சாலை கடல் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீர் வடிந்தபிறகு சாலையில் கடல் மணல் குவிந்துகிடக்கிறது. மணல் மேடாக காட்சியளிக்கும் சாலையில் வாகனங்கள் பயணிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜாக்கமங்கலத்தில் தேங்காய் மட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து தும்பு தயாரிக்கும் தொழில் அதிகமாக நடக்கிறது. கடற்கரை தென்னந்தோப்புகளில் நீளவாக்கில் பாந்துகள் தோண்டப்பட்டு லட்சக்கணக்கான தேங்காய் மட்டைகள் பதப்படுத்தும் நோக்கில் ஊறவைக்கப்படுள்ளன. இந்த தேங்காய் மட்டைகள் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் இழுத்துச்சென்றுவிட்டது. இதனால் தேங்காய் நார் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

``ஒரு தேங்காய் மட்டை 3 ரூபாய்க்கு  விலைக்கு வாங்குகிறோம். அதை டெம்போவில் கொண்டுவந்து ஊறவைக்க ஒரு மட்டைக்கு 50 பைசா வரை கூலியாக கொடுக்கவேண்டியுள்ளது. லட்சக்கணக்கான தேங்காய் மட்டைகளை கடல் அலை இழுத்துச்சென்றதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார் தேங்காய்நார் உற்பத்தியாளர் கோலப்பாபிள்ளை. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களும், தேங்காய் நார் உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.