Published:Updated:

திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம் 

மு.இராகவன்

Thirumananchery Temple

திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம் 
திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம் 

திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகத் திகழும் பிரசித்திபெற்ற திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கல்யாண திருவிழா நேற்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது.  

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு அஷ்டமி திதி, பூச நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 12.00க்கு மேல், 1.00 மணிக்குள் கடக லக்னத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.  நாடெங்கிலும் இருந்து திருமணத் தடை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டுதல் செய்வதும், வேண்டுதலின்படி திருமணம் நடந்தபின்பு மணமாலையைக் கொண்டு வந்து பரிகாரம் செய்வதும் நடைபெறும் கோயில் இதுவாகும். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வெகுச் சிறப்பான விழாகும்.  இன்றைய நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருளாசிப் பெற்றனர்.  

இதுபற்றி கணேச குருக்களிடம் பேசினோம், 'கடந்த 21-ம் தேதி கணபதி ஹோமம் செய்து விழா தொடங்கியது. 22-ம் தேதி உமாமகேஸ்வர ஹோமம், மஹா அபிஷேகம், சாயரட்சையில் வாஸ்து சாந்தி, லட்சாப பந்தனம் நடத்தப்பட்டது.  23ம் தேதியான இன்று காலை 9.00 மணிக்கு சுவாமி பரதேசிக் கோலமாக மேல திருமணஞ்சேரியில் உள்ள எதிர்க்கொள்பாடி கோயிலுக்குச் செல்ல, சுவாமிக்கு விஷேசப் பூஜை செய்து காசியாத்திரை நடைபெற்றது.  அதன்பின், திருமணஞ்சேரியில் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது.  இன்று மாலை புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதியுலா நடைபெறும். நாளை 24-ம் தேதி காலை சப்தசாகர குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.  25ம் தேதி பொன்னூஞ்சல் வைபவம் நடைபெறும்.  26ம் தேதி சுவாமி மண்டப பிரவேசத்துடன் திருவிழா இனிதே முடிவுபெறும்.  

இவ்விழாவினைக் காண ஆயிரக்கணக்கான பக்தாகள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.