Published:Updated:

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!
பிரீமியம் ஸ்டோரி
சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

Published:Updated:
சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!
பிரீமியம் ஸ்டோரி
சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

ந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய ஏர்செல், திடீரென திவால் நோட்டீஸ் அளித்து தன் வாடிக்கையாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக தமிழகத்தில் பல லட்சம் பேர் ஏர்செல் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ‘‘இதுபோன்ற அதிர்ச்சிகள், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் காத்திருக்கின்றன’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

நாடு முழுவதும் எட்டரைக் கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்செல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் சில நாள்களுக்கு முன்பு திடீரென முடங்கின. செல்போன் கோபுரங்களுக்கு வாடகை பாக்கி வைத்ததால், ஏர்செல் நிறுவனத்தின் சேவைகள் முடங்கியதாகச் சொல்லப் பட்டது. அதனால், வேறு நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்கள் நாட ஆரம்பித்தனர். இந்த நிலையில், ரூ.1,500 கோடிக்கும் மேல் கடன் இருப்பதால், தொடர்ந்து சேவை வழங்க முடிய வில்லை என்றும் தங்கள் நிறுவனத்தைத் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க வேண்டுமென்றும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்தியாவில் செல்போன் அறிமுகமான காலம் தொட்டு பல ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்த ஏர்செல் நிறுவனம், திடீரென போண்டி ஆனதற்கு என்ன காரணம்?

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

‘‘புதிய நிறுவனம் ஒன்றின் வரவால் ஏற்பட்ட போட்டி, சட்டரீதியான சவால்கள், தாங்கமுடியாத கடன் சுமை, அதிகரித்து வரும் இழப்புகள் ஆகியவற்றால் ஏர்செல் நிறுவனம் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது’’ என்று ஏர்செல் நிறுவனத்தின் இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். ‘புதிய நிறுவனம்’ என்று அவர்கள் குறிப்பிடுவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவைத்தான்.

2016 ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஆஃபர்களை வாரி வழங்க ஆரம்பித்தனர். அதனால், ஏர்டெல் உள்பட இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஜியோவின் ஆஃபர் அதிரடி அட்டாக்கை எதிர்கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் கட்டணக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் டெலினார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட சிறிய நிறுவனங்கள் ஓட்டம்பிடித்தன. ஏர்செல் நிறுவனம் திவால் நிலைக்கு வந்துவிட்டது.

‘‘ஜியோவின் போட்டியைச் சமாளிக்க அனைவரும் கட்டணங்களைக் குறைத்ததால், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் உள்பட எந்த நிறுவனத்துக்கும் கடந்த ஆண்டு லாபமே இல்லை’’ என்கிறார், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் (பி.எஸ்.என்.எல். இ.யூ)  மாநில பொதுச்செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன். அவரிடம் பேசினோம். ‘‘தரைமட்ட அளவுக்கு ஆஃபர்களை ரிலையன்ஸ் ஜியோ வாரிவழங்கியதால், எல்லா நிறுவனங்களுமே கட்டணங்களை வெகுவாகக் குறைத்துவிட்டன. இது ஜியோவின் ஒரு தந்திரம். போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் மார்க்கெட்டிலிருந்து அழித்தொழிக்கும் வகையிலான மிகக்குறைந்த விலைக்கு ‘பிரிடேட்டரி பிரைஸ்’ (Predatory price) என்று பெயர். ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை வேட்டையாடி வீழ்த்துவது போன்ற கொடூரம் இது.

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

இப்படிப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கையில் எந்த நிறுவனமும் ஈடுபடக் கூடாது என்பதற்காகத்தான், ‘விலைக்குறைப்பு கூடாது’ என்ற உத்தரவை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) பிறப்பித்திருந்தது. அதை மீறி, ஜியோ அறிமுகம் செய்யப்பட்டபோது, ‘அறிமுக ஆஃபர்’ என்ற பெயரில் ‘அனைத்தும் இலவசம்’ என்று கொடுத்தார்கள். மூன்று மாதங்கள் கழித்து, ‘நியூ இயர் ஆஃபர்’ என்று கொடுத்தார்கள். அவை எல்லாமே சட்டவிரோதம். இப்போது, ‘மார்க்கெட்டில் 30 சதவிகிதத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் இப்படி பிரிடேட்டரி பிரைஸ் வைத்துக்கொள்ளலாம்’ என்று விதியை டிராய் மாற்றியுள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவான நடவடிக்கை. ஏர்செல் திவால் ஆகிவிட்டது. இனி, ஏர்டெல் உள்பட எல்லா நிறுவனங்களுக்கும் இந்த கதி ஏற்படும்.  உள்நாட்டு குளிர்பானங்களை அழித்தொழிப்பதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் கடைபிடித்த அதே உத்திகளைத்தான், இப்போது ரிலையன்ஸ் ஜியோ கையிலெடுத்துள்ளது. உள்நாட்டுக் குளிர்பானங்களை அழித்துவிட்டு, அதன் பிறகு பன்னாட்டுக் குளிர்பானங்களின் விலைகளை எப்படி உயர்த்தினார்களோ, அதைப்போன்ற நிலைதான் இதிலும் ஏற்படும்’’ என்று எச்சரிக்கிறார் பாபு ராதாகிருஷ்ணன்.

சோடா கம்பெனியும் ஏர்செல் நிறுவனமும்!

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டுவரும் ஆட்சியாளர்கள், தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவாகச் செயல்படுவது பெருங்கொடுமை. நாடு முழுவதும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் டி.வி சேனல்களில் வெளியான ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. ‘அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்காகவே பிரதமர் வேலை செய்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்த விளம்பர விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘பிரதமரின் புகைப்படத்தை ஜியோ விளம்பரங்களில் பயன்படுத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை’ என்று பதில் அளித்த அரசுத் தரப்பு, ‘அனுமதி பெறாமல் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்திய ரிலையன்ஸ்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்காமல் சைலன்ட் ஆகிவிட்டது.

- ஆ.பழனியப்பன்