Published:Updated:

‘துளி’ர்க்கும் அன்பு!

‘துளி’ர்க்கும் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
‘துளி’ர்க்கும் அன்பு!

சு.சூர்யா கோமதி - படங்கள்: ப.சரவணகுமார்

‘துளி’ர்க்கும் அன்பு!

சு.சூர்யா கோமதி - படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
‘துளி’ர்க்கும் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
‘துளி’ர்க்கும் அன்பு!

ந்தக் குட்டிப் பெண்ணுக்கு ஏழு, எட்டு வயதிருக்கும். பள்ளிச் சீருடை, தையல் பிரிந்த பை, கண்களில் சின்னத் தயக்கத்தோடு அந்தக் கடையின் முன் நின்று கொண்டிருந்தாள். பின்னால் அவளின் அப்பா. இருவரின் தோற்றமும் அவர்களின் வறுமையைச் சொன்னது.

 ``அஞ்சு நிமிஷம் இருப்பா’’ என்று சொல்லிவிட்டு அந்தக் குட்டிப் பெண் கடைக்குள் செல்கிறாள். சரியாக ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தவளின் கையில் சிறிய பை. அதிலிருந்த சட்டையை எடுத்துக்கொடுத்து, ‘ஹேப்பி பர்த்டே அப்பா’ என்கிறாள். அப்பா ஒரு நிமிடம் திகைத்து, பின் மகளை வாரி அணைக்கிறார்.

‘துளி’ர்க்கும் அன்பு!

அப்பாவின் திகைப்புடனேயே நாமும் எதுவும் புரியாமல் அந்தக் கடைக்குள் நுழைந்தோம். “இங்க ஏழைக் குழந்தைகள் எதை வேணும்னாலும் ஷாப்பிங் பண்ணிக்கலாம்மா...” என்றபடி அறிமுகமானார் அஜித்குமார். அவரும், அவரின் நண்பர்களான சிவாஜிபிரபாகர் மற்றும் ஜெய்பாலா இணைந்து அடையாறில் ஏழைக் குழந்தைகளுக்காகத் தொடங்கியிருக்கும் ‘துளி’ இலவச ஷாப்பிங் ஸ்டால்தான் அது.

“பள்ளி விடுற நேரம், சரியா மாலை 4.30 மணிக்கெல்லாம் குழந்தைகள் வர ஆரம்பிச்சுடு வாங்க.  இரவு 8 மணிவரை கடை களைகட்டும்  பாருங்க” என அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் கூறியதுபோலவே அரசுப்பள்ளி சீருடையுடன் குழந்தைகள் உற்சாகமாக வருகிறார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்படும் 1,500 ரூபாய் மதிப்புள்ள இலவச டோக்கனை வாங்கிக்கொண்டு குதூகலத்துடன் ஷாப்பிங்கைத் தொடங்குகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘துளி’ர்க்கும் அன்பு!

குழந்தைகளுக்கான ஆடைகள், பெரியவர்களுக்கான ஆடைகள், பொம்மை வகைகள், அடிப்படைத் தேவைகள், ஸ்டேஷனரி பொருள்கள் என தனித்தனி அலமாரிகள், ரேக்குகளில் அடுக்கிவைக்கப்பட்டிருப்பவற்றில், தங்களுக்குத் தேவையானவற்றை மகிழ்ச்சியுடன்

‘துளி’ர்க்கும் அன்பு!

தேர்வுசெய்கிறார்கள். “இங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் யாரோ ஒருவரால் பயன்படுத்தப் பட்டவைதான். அவர்களுக்குத் தேவைப் படாதவற்றை எங்களிடம் வந்து தருகிறார்கள். நாங்கள் அவற்றில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள ஆடைகளை, பொருள்களைத் தரம் பிரித்து எடுக்கிறோம். உடைகளை சலவைசெய்து, அயர்ன் செய்தும், பொருள்களைச் சுத்தம்செய்தும் இங்கு வைக்கிறோம். ஏ.சி வசதி, ட்ரையல் ரூம் உள்பட பெரிய கடைகளில் உள்ள வசதிகளைச் செய்துவைத்திருக்கிறோம். இங்கு வரும் குழந்தைகள், ஒரு மாலில் ஷாப்பிங் செய்யும் மகிழ்வுடன் இங்குள்ள பொருள்களை வாங்கும் அந்தச் சந்தோஷமே எங்களின் நோக்கம்’’ என்று அஜித்குமார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “சார், சிம்ரன் மேடம் கொடுத்துட்டு வரச்சொன்னங்க” என்று ஒரு பார்சல் வந்து சேர்கிறது. நடிகை சிம்ரனின் வீட்டிலிருந்து வந்த அந்தப் பொருள்களை நன்றி சொல்லி பெற்றுக்கொண்டு தரம்பிரிக்க அனுப்புகிறார் சிவாஜி பிரபாகர். யேசுதாஸ், ரேவதி, சினேகா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்பட பல பிரபலங்களின் வீடுகளிலிருந்து இங்கு இப்படி பார்சல்கள் வந்துசேர்கின்றன. 

‘துளி’ர்க்கும் அன்பு!

“ஆடை, நோட்டுப் புத்தகம், காலணி என இங்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். குழந்தைகள் கடைக்குள் நுழைந்தவுடன் அவர்களின் கையில் 1,500 ரூபாய் மதிப்புள்ள இலவச டோக்கன் ஒன்று வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கோ, வீட்டுக்கோ என்ன பொருள் வேண்டுமானாலும் தேர்வுசெய்துகொள்ளலாம். ‘இலவசமா கொடுக்கிறதுக்கு எதுக்கு  அந்த டோக்கன்?’ என்று பலர் கேட்கிறார்கள். இலவசம் என்பது கையேந்தவைக்கும் ஓர் உணர்வை அவர்களுக்குத் தந்துவிடக் கூடாது என்ற எண்ணமே இந்த டோக்கன் ஐடியாவுக்கும் அக்கறைக்கும் காரணம்’’ - ஜெய்பாலாவின் வார்த்தைகளில் பெருமிதம்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான்’ என்பது நல்ல நம்பிக்கை. ‘ஏழைக் குழந்தைகளின் சிரிப்பில் இறைவன் சிரித்தபடி இருக்கிறான்’ என்பது மகத்தான நம்பிக்கை.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism