Published:Updated:

ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..!

ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி..  மாதிரிதான் பாலகுமாரனும்..!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..!

02.11.1997 ஆனந்த விகடனிலிருந்து...ரா.கண்ணன் - படங்கள்: ‘ஸ்டில்ஸ்’ ரவி

ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..!

02.11.1997 ஆனந்த விகடனிலிருந்து...ரா.கண்ணன் - படங்கள்: ‘ஸ்டில்ஸ்’ ரவி

Published:Updated:
ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி..  மாதிரிதான் பாலகுமாரனும்..!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..!

 “யோகி ராம்சுரத்குமாரா...”

விழி மூடி விரல் மடக்கி கொஞ்சம் சித்தர் மாதிரி சிரிக்கிற பாலகுமாரன் சொல்கிறார்... “நான் ஒரு கர்வி... பயங்கர அலட்டி...!

“ஆட்டோகிராஃப் புத்தகத்தை நான் பத்திரப்படுத்தலை. அது சீக்கிரம் தொலைஞ்சுரும்னு தெரியும். மொத்தமா ஆறேழு பேர்கிட்டே வாங்கினேனோ என்னவோ... எனக்கு, அப்பவே கர்வம் உண்டு. அதுல ஒரு இன்னொசன்ஸ் இருக்கும். நாலு பேருக்கு நான் கையெழுத்துப் போடணும்; வாங்கக் கூடாது. ஆனாலும் வாங்கப் போனேன்.

ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி..  மாதிரிதான் பாலகுமாரனும்..!

கௌடியா மடம். தியானம் கற்கச் செல்வேன். பெரிய பெரிய ரிஷியெல்லாம் தபஸ் பண்ணின மாதிரி, நானும் வரணும்னு எண்ணம். லோயர் மிடில் க்ளாஸ் பிராமணப் பையன் வேற என்ன செய்வான்? அங்கே ஒரு பிரம்மச்சாரி தியானம் பழகித்தருவார். ஒருநாள், மடத்தின் எதிர்வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கிறது. கதவைத் திறந்தவர் எம்.என்.நம்பியார். பரபரவென்று ஆனேன். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கணும். கையில் நோட்டுப் புத்தகம் எதுவும் இல்லை. தெருவில் கிடந்த பேப்பர் எடுத்துக்கொண்டு ஓடினேன். பேனாகூட இல்லை. ‘சார்... சார்... உங்க கையெழுத்து வேணும்.’ - திரும்பிப் பார்த்தார் நம்பியார். பேப்பரைப் பார்த்தார். ‘ம்... இதுல வேணாம்.’ - என்று விசுக்கென நடந்து உள்ளே போய்விட்டார். எனக்கு அது அவமானமாயிற்று. குபுக்கென கண்ணீர் பொங்கிற்று.

திரும்பினால்... என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் பிரம்மச்சாரி. ‘இதோ பார்... ஒண்ணு சினிமாக்காரன் பின்னால ஓடு. இல்லை... தியானம் கத்துக்க வா. ரெண்டையும் பண்ணாத!’  இறை அருளால் நான் இரண்டையுமே செய்துகொண்டிருக்கிறேன்.

‘அந்த வலி அபத்தம்’ என்று புரிகிறபோது, ‘சார்... சார்... உங்க கையெழுத்து வேணும்’ - தடாலென்று அஜந்தா ஓட்டல் திருப்பத்தில் என் ஸ்கூட்டர் முன்னால் வந்து விழுகிறான் ஓர் இளைஞன். வலியின் வேதனை உணர்ந்தவன் என்பதால், வண்டியை நிறுத்திவிட்டு அவன் நீட்டிய புத்தகத்தில் கையெழுத்திடுகிறேன். ‘ஓடுற வண்டி முன்னால விழாதே... பிய்ஞ்சு போயிடுவே.’ என்று உரிமையோடு கோபிக்கிறேன். ‘என்ன படிக்கிறே கண்ணா?’ - வாஞ்சையாக விசாரிக்கிறேன். அடுத்த நாள் அவனை நான் மறந்துபோவேன். அவன் மறக்க மாட்டான். ‘பாலகுமாரனைப் பார்த்தேன்’ என்று சிநேகிதனியிடம் பீற்றியிருப்பான்.   ‘ஆட்டோகிராஃப் பார்த்தியா...’ என்று அலட்டியிருப்பான். பிறகொரு நாளில் அவனுக்கும் அது மறந்துபோகும்.

நூறு ரூபாய் நோட்டை நீட்டி, ‘கையெழுத்துப் போடுங்க’ என்பவனை முறைப்பேன். ‘அது கவர்னர் மட்டும்தான் கையெழுத்துப் போடணும்.’

‘உள்ளங்கையில் எழுது’, ‘சட்டையில் எழுது’  - வந்து நிற்பவனிடம், ‘உனக்காக நூற்று இருபத்தேழு டைட்டில் வால்யூம் வால்யூமா எழுதியிருக்கேன். அதுக்கும் மேல என்ன எழுதச் சொல்றே?’

‘எதுனா எழுதும்மா’
செய்க தவம்
செய்க தவம்
தவமெனப்படுவது
அன்பு செய்க
பற... பற...
மேலே... மேலே...


- எத்தனை எத்தனை எழுதியபிறகும் காலையில் கடற்கரையில் நடைபயிலும்போது வழிமறித்து முகமன் கூறுபவருக்கு வணக்கம் சொல்வது சுகம்.

தொலைபேசியில் முகம் தெரியாத குரல் ஒன்று நேரில் பார்க்க விரும்பும்.

‘என்ன ஏதாவது பிரச்னையா?’

‘...’

‘காதலா?’

‘ஆமா...’

‘ரொம்ப நாளா படுத்துதா...?’

‘இப்போ ரணமாயிருக்கு...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி..  மாதிரிதான் பாலகுமாரனும்..!

நேரில் வந்து, பாதி பேசுகிறபோதே உடைந்து அழுகிற இருபத்துமூணு வயசுப் பையனுக்காகப் பிரார்த்திப்பேன். நாற்பது நிமிஷம் பேசி ஒரு காபி முடித்து எழுந்து போகிறவன், ‘உங்க ஆட்டோகிராஃப் வேணுமே!’ எனும்போது கோபம் வரும்.

இது ஒரு நாள் புரியும். புரியும்போது நான் சொன்னது நினைவுக்கு வரும். எழுத ஆரம்பித்த காலத்தில் பெண்கள் என் பின்னால் வந்தபோது... ‘ஏதாவது எழுதிக் குடு பாலா...’ என்றபோது அது எனக்குமே மிதப்பாகத்தான் இருந்தது.

அதெல்லாம் ஆரம்ப காலம். என்னைப் படித்தவர்கள் ‘பாலா... பாலா’ என்று கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிட, ஒருநாள் அது எனக்கு உறைத்தது.

என்னை நான் உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு குரு கிடைத்தார். எல்லாருக்கும் வாத்தியார் வேணும். சிலது புரியும். சிலது கேட்கணும். ‘அடேய் மடையா’னு சொல்லணும். ‘செல்ல ராஸ்கல்’ என்று ஆறுதலாகத் தடவணும். நான் தெளிந்தேன் நண்பர்களே!

பசு, தான் பால் கொடுக்கறதைப் பற்றியோ... மரம், தான் பழம் தர்றதைப் பற்றியோ.... செடி, தான் பூ பூக்கறதைப் பற்றியோ கர்வப்படறதில்லையே. அப்படித்தான் இப்போ பாலகுமாரனுக்கு எழுத்தும்!

என்னை ஞாபகம் வெச்சுக்கிறதோ, தூக்கிப் போடுறதோ உம் பாடு. நான் இல்லை முக்கியம். என்னோட பேசு. என்னைப் படி. அதுல ஏதாவது இருந்தா பிடிச்சுக்கோ. பிடிக்கலைனா தூக்கிப் போட்டுட்டுப் போ . நான் போயிருக்கேன். அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் என் வேலையைச் சரியா செய்றேன். அதுதான் எனக்கு முக்கியம்!”

- என்கிற பாலகுமாரனுக்குள் ஓர் ஆசை இருக்கிறது. “ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் என் நடையில் மறுபடியும் சொல்ல வேண்டும். அதைச் செய்துமுடிக்க தயை வேண்டும்..!”

கோபம் குறைந்திருக்கிறது. தியானம், பிரார்த்தனை என்று தன்னையறிதலில் தீவிரமாகி விட்ட பாலகுமாரன் சொல்கிறார், “உடைஞ்சு நொறுங்கி நிக்கற ஒவ்வொருத்தன் பிடரிமயிரையும் உலுக்கி ஒண்ணு சொல்வேன். ‘ஏண்டா திகைச்சு நிக்கற...? இப்ப என்ன ஆச்சு. என்னைப் பார். நான் ஃபெயிலியர்டா. 

எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணலை. தப்பு இல்லை. அந்த வயசுலயே அடல்ட்ரி. ஜெயில்ல இருந்திருக்கேன் தெரியுமா. மேலு காலெல்லாம் சிரங்கா இருக்கும். மோருஞ்சாதம் தவிர வேறு எதுவும் தெரியாது. என் பேரே ‘மக்குப் பாப்பா’ தான். நான் வரலியாடா? நாலு பேர் பார்க்கிற இடத்துக்கு என்னாலயே வர முடியுதுன்னா, ஏன் உன்னால முடியாது. ச்சீ... வா!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism