Published:Updated:

நீதி இன்னும் கிடைக்கவில்லை!

நீதி இன்னும் கிடைக்கவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
நீதி இன்னும் கிடைக்கவில்லை!

வெ.வித்யா காயத்ரி - படம்: சொ.பாலசுப்ரமணியன்

நீதி இன்னும் கிடைக்கவில்லை!

வெ.வித்யா காயத்ரி - படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
நீதி இன்னும் கிடைக்கவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
நீதி இன்னும் கிடைக்கவில்லை!
நீதி இன்னும் கிடைக்கவில்லை!

ஸ்ருதி... 2012-ம் ஆண்டு ஜூலை மாதம், தாம்பரம் அடுத்துள்ள சேலையூர், சீயோன் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாகத் தவறி விழுந்து பலியான பிஞ்சு. அப்போது தமிழ்நாடே கொந்தளித்தும், ஸ்ருதியின் மரணத்துக்குக் காரணமான வர்களுக்கு இன்றுவரை எந்தவொரு சட்டபூர்வமான தண்டனையும் அளிக்கப் படவில்லை. இன்னொருபுறம், ஸ்ருதியின் பெற்றோருக்குப் பள்ளித் தரப்பில் இருந்து வழங்கப்பட  வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நஷ்டஈடும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஆறு வருடங்களாக, கோர்ட் வாசல் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பெற்றோரைச் சந்தித்தேன்.

ஆழ்ந்த அமைதிக்குக் பிறகு, ஸ்ருதியின் அம்மா ப்ரியா பேசத் தொடங்கினார். “நாங்க மலையாளி. என் கணவர் தொழிலுக்காகத்தான் சென்னை வந்தோம். முடிச்சூர் பி.டி.சி குவார்டர்ஸில் இருந்தோம். ஸ்ருதி இறந்ததுக்கு அப்புறம் எங்களால் அந்த வீட்டுல இருக்க முடியலை. அதனால இங்க மாறி வந்துட்டோம். என் கணவர் ஸ்கூல் வேன் ஓட்டுற டிரைவர். எல்லா குழந்தைகளையும் பத்திரமா ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பார். ஆனா, எங்க குழந்தையை ஸ்கூல் பஸ்ஸுக்குப் பலிகொடுத்துட்டோமே’’ என்றவரைத் தேற்ற முடியவில்லை. ஸ்ருதியின் அப்பா சேதுமாதவன் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதி இன்னும் கிடைக்கவில்லை!

“நான் தாம்பரம் வரைக்கும் ட்ரிப் அடிப்பேன். என் பொண்ணு, தாம்பரத்தை அடுத்துள்ள சீயோன் பள்ளியில ரெண்டாவது படிச்சா. அதனால தினமும் அவளோட ஸ்கூல் பஸ்லதான் போவா. அன்னிக்கு விபத்து நடந்திருக்குனு தகவல் வந்ததுக்கு அப்புறம்கூட, என் வண்டியில் இருந்த எல்லாக் குழந்தைங்களையும் அவங்கவங்க வீட்டில் பத்திரமா சேர்த்ததுக்கு அப்புறம்தான் என் குழந்தையைப் பார்க்க ஓடினேன். அவ இல்லாம, வெறும் கூடாகத்தான் நாங்க கிடக்குறோம்’’ - அதற்கு மேல் பேச முடியாமல், வீட்டில் இருந்து வெளியேறினார் சேதுமாதவன்.

பேருந்தை முறையாகப் பராமரிக்காத பள்ளியின் மெத்தனமே தன் குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என, சேதுமாதவன் தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். பள்ளி நிர்வாகம் ஸ்ருதியின் பெற்றோருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கத் தீர்ப்பாயத்தால் உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்கள் கேட்டிருந்த இழப்பீடுத் தொகையைவிட குறைவான இழப்பீடுத் தொகையை கொடுக்கச் சொல்லித் தீர்ப்பு வந்ததால், சேதுராமன் டெல்லியில் உள்ள  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (National Consumer Disputes Redressal Commission) மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உடனடியாக ஐந்து லட்சத்தைப் பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவும் இன்றுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

நீதி இன்னும் கிடைக்கவில்லை!

‘’நாங்க பணத்துக்காக இந்த வழக்கைத் தொடரலை. அந்தப் பணம் கிடைச்சா, வழக்கை இன்னும் தீவிரப்படுத்துவோம். நிறைய வக்கீல்கள், எங்ககிட்ட காசு இல்லைன்னு வழக்குல இருந்து விலகிட்டாங்க. இப்போ ரெண்டு வக்கீல்கள் எங்களுக்காகப் போராடுறாங்க. பள்ளியின் தாளாளர் விஜயன், ‘அந்த பஸ் எங்க பள்ளியின் பஸ் இல்லை’, ‘அது ஏற்கெனவே காணாமல் போய்விட்ட பேருந்து’னு நிறைய பொய்களை ஜோடிச்சார். நிறைய மிரட்டல்கள் வந்துச்சு. இந்த வழக்கில் சாட்சிக் கையெழுத்து போட்டவங்களை வாபஸ் வாங்கச் சொல்லி பணம் கொடுக்க முயற்சி பண்ணாங்க. ஆனா, இப்போவரை அவங்க எல்லாம் எங்களுக்குத் துணையாதான் இருக்காங்க. எல்லாத்தையும்விட கொடுமையான விஷயம் என்னன்னா, பாப்பா இறந்தப்போ பள்ளித் தரப்பில்  இருந்து ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரலை. மிரட்டத் துணியுறவங்களுக்கு, மன்னிப்பு கேட்க மனசில்லை. 

எங்க பாப்பா மாதிரி, இனி ஒரு பிஞ்சு உயிர் பலியாகக் கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும், பஸ் ஃபீஸ் எவ்வளவு வாங்குறாங்க! அதில் பேருந்தைப் பராமரிக்கிறது அவங்களோட கடமை இல்லையா?”

பேட்டி முடிந்து கிளம்பியபோதும், அந்தக் கேள்வி என்னைத் துரத்திக்கொண்டேயிருந்தது.

 ``தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்!’’

ஸ்ருதி படித்த பள்ளியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி பள்ளித் தரப்பினருடன் பேசினோம்....

“யாரோ ஒருவர் எங்கள் பள்ளியின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடாகப் பேருந்து வாங்கியுள்ளார். அது எங்களின் பஸ் இல்லை என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தந்துள்ளோம். நுகர்வோர் நீதிமன்றம் கொடுக்கக்கூறிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால், உண்மையாக அந்தப் பேருந்தின் உரிமையாளர்தான் அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பதால் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். பள்ளிதான் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தால் நிச்சயம் வழங்கி விடுவோம். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை, பள்ளித் தாளாளர் சந்திக்கவில்லை. ஏனெனில்,சட்டப்படி அவர் குழந்தையின் பெற்றோரைச் சந்திக்கக்கூடாது. அவர் ஒரு கல்வியாளர்; அவர் எப்படி மிரட்டுவார்? அந்தப் பஸ் ஓனர் தரப்பினர் மிரட்டியிருக்கலாம். அதற்கு இவர் பொறுப்பேற்க முடியாது” என்றனர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism