Published:Updated:

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக, ‘ஜெம் லேபரேட்டரீஸ் நிறுவனம்’ சில வாரங்களுக்கு முன் அறிவித்துள்ளது. இதனால், இப்பகுதியில் தொடர்ந்து வந்த போராட்டங்கள் ஓய்ந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர், இப்பகுதி மக்கள். ஆனாலும், இது குறித்து மத்திய அரசு தெளிவான அறிக்கைகளை வெளியிடாததால் இன்னும் ஒருவித அச்சத்துடனே இருக்கிறார்கள், மக்கள்.  

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

ஓராண்டுக்கு முன்பு அமைதியும் மகிழ்ச்சியும் விரவிக்கிடந்த நெடுவாசல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் சொல் ஒலிக்கத்தொடங்கியதிலிருந்து போராட்ட பூமியாக மாறியது, இப்பகுதி. இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் ஒரு தவம்போல, காத்திருப்புப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர், இப்பகுதி மக்கள். அதனைத்தொடர்ந்துதான் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால், ‘இது நிரந்தரமான வெற்றிதானா?’ எனும் குழப்பத்தால், இப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

ஜெம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரிபிரசாத்திடம் பேசியபோது, “நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலத்தை எங்களது நிறுவனத்தின் பெயருக்கு மாற்றித் தரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்குப் பலமுறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. ஓர் ஆண்டு வரை காத்திருந்ததால் பல வகைகளிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், நெடுவாசல் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளோம். இதற்கு மாற்றாக வேறு இடம் வழங்க வேண்டும் எனப் பெட்ரோலியத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.  

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

ஏற்கெனவே காவிரி டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திய மீத்தேன் விவகாரத்தில்... ‘உரிய காலத்தில் மீத்தேன் எடுக்கும் பணிகளைத் தொடங்காததால், ‘தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ நிறுவனத்துக்கு அளித்திருந்த அனுமதியை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். தொடர்ந்து மீத்தேன் திட்டத்தைக் கைவிடுவதாக அந்நிறுவனமும் அறிவித்தது. ஆனால், இந்தத்தகவல் பெட்ரோலியத்துறையின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகவே இல்லை. அரசிதழிலும் வெளியாகவில்லை. அந்த நிலையில்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்காகத் தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய அரசுக்கு விண்ணப்பித்த தகவல் வெளியானது. இதே நிலை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திலும் உருவாகலாம் எனச் சந்தேகிக்கிறார்கள், நெடுவாசல் பகுதி மக்கள்.  

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த ராமநாதன், “எங்களுக்கு 10 சதவிகிதம்தான் பயம் நீங்கியிருக்கு. நெடுவாசலைச் சுத்தியிருக்குற நல்லாண்டார் கொள்ளை, கோட்டைக்காடு, வானக்கன்காடு, வடகாடுனு நாலு ஊர்கள்ல ஒ.என்.ஜி.சி கையகப்படுத்தி இருக்குற நிலங்கள்ல செயல்படாத கிணறுகள் இருக்கு. இதுல ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பு இருக்கு.
 
ஒ.என்.ஜி.சி, ஜெம் அல்லது வேறு ஏதாவது நிறுவனமோகூட, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கலாம். அதுதான் எங்களோட பயம். எங்க ஊர்ல எங்களால புதுசா வீடு கட்ட முடியலை. அவசரத்தேவைக்கு நிலங்களை விற்பனை செய்ய முடியலை. வாங்குறதுக்கு யாரும் தயாரா இல்லை. எப்போ வேணும்னாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பவும் செயல்படுத்து வாங்கங்கிற பயம் இருக்கு. ஆனா, திரும்பவும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுத்தா எங்க உயிரைக் கொடுத்தாவது எங்களோட கிராமத்தை மீட்க நாங்க தயாராகிட்டோம்” என்றார்.

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்? அச்சத்தில் நெடுவாசல் மக்கள்!

இப்பகுதி மக்கள் எழுப்பும் கேள்விகள்... 

*ஜெம் நிறுவனம் நிரந்தரமாக வெளியேறிவிட்டதா?

*இத்திட்டம் மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி மூலமாகச் செயல்படுத்தப்படுமா?

*நெடுவாசலை விடுத்துத் தமிழகத்தின் வெறு எந்தப்பகுதியிலாவது இத்திட்டத்தைச் செயல்படுத்துவார்களா?

*போராட்டங்களில் ஈடுபட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்குகளைத் தமிழக அரசு எப்போது வாபஸ் வாங்கும்?

இக்கேள்விகளுக்கு விடையளித்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது, மத்திய மாநில அரசுகளின் தலையாயக் கடமை.