முன்னோடி இயற்கை விவசாயி தாந்தோணி, கடந்த மே 27-ம் தேதி, இயற்கையுடன் இணைந்துவிட்டார். தாந்தோணியம்மன் என்ற பெயரில் உள்ள தாந்தோணியைத் தன் பெயராக வைத்திருந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகப் பணியை விட்டுவிட்டு விவசாயத்துக்கு வந்தவர். 25 வருடங்களுக்கு முன்பு சுவாமி சிவானந்த பரஹம்சரைப் பின்பற்றிச் சித்தர் மார்க்கத்துக்கு மாறினார். அன்றிலிருந்து வெள்ளாடையை உடுத்தி விவசாயத்தைத் முழுநேரத் தொழிலாக மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்.

ஆரம்பத்தில் ரசாயன விவசாயம் மேற்கொண்டிருந்தாலும், அது தவறு என்று உணர்ந்தபின், உடனடியாகத் தன்னை மாற்றிக் கொண்டவர். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வந்தார். இதற்கு வழிகாட்டியது பசுமை விகடன்தான் என்று மேடைகளிலேயே சொல்லியுள்ளார். நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் வழியில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வந்தவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், இயற்கை விவசாய நிகழ்வுகளுக்கு உணவளித்து உதவியவர். பசுமை விகடன் நடத்திய இயற்கை விவசாயக் கருத்தரங்கு, பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இயற்கை முறை நெல் சாகுபடி குறித்துப் பேசியுள்ளார்.

அவருடைய ஊரைச் சேர்ந்தவரும், தாந்தோணியை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவருமான இயற்கை விவசாயி வீரராகவனிடம் பேசினோம். “அவரை 71 வயது இளைஞர்னுதான் சொல்லணும். எங்க பகுதியில எல்லோரும் ரசாயன விவசாயம் செஞ்சிட்டு இருந்தபோது, மீண்டும் பாரம்பர்ய இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தவர் தாந்தோணி ஐயா. 1996 முதல் 2001 வரை வில்லிவலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது பாலாற்றிலிருந்து குடிநீர் வசதி, கான்கிரீட் சாலைகள், சமுதாயக் கூடம் என்று மக்களோட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்திருக்கார். எப்போதும் தோட்டத்தில்தான் இருப்பார். இயற்கை விவசாயத்து மேல இருந்த ஆர்வத்தால, உதயேந்திரன் உழவர் குழுவை 2012-ல் தொடங்கி, அதில் நான் உட்பட 7 பேரை உறுப்பினரா சேர்த்தார். அவரோட வழிகாட்டுதல் மூலமா, இப்போ ஏழு பேரும் இயற்கை விவசாயம் செய்றோம்.

அவருக்குச் சொந்தமானது மூன்றரை ஏக்கர் நிலம்தான். அதன்பிறகு தரிசா கிடந்த 15 ஏக்கர் கோயில் நிலத்தைச் செப்பனிட்டு இயற்கை விவசாய நிலமாக மாற்றினார். பார்ப்பவர்களிடம் எல்லாம் இயற்கை விவசாயத்தைப் பற்றி வலியுறுத்துவர். வேளாண் அதிகாரிகள்கிட்ட கூட ‘உயிர் உரங்கள் பத்தியே பேசுங்க. ரசாயன உரங்கள பத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீங்க’ என்பார். அவரோட முயற்சியால் இன்னைக்கு வில்லிவலம் பகுதியில 80 ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்குது” என்றார்.