Published:Updated:

கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!
பிரீமியம் ஸ்டோரி
கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

அதானியை அரவணைக்கும் தமிழக அரசு

கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

அதானியை அரவணைக்கும் தமிழக அரசு

Published:Updated:
கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!
பிரீமியம் ஸ்டோரி
கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் அமைக்கும் சரக்குப்பெட்டக மாற்றுமுனையத் துறைமுகத்துக்காக, குமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சூறையாடும் அக்கிரமம் அரங்கேறிவருகிறது.

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமம் துறைமுகம் அமைத்து வருகிறது. அதன் கட்டுமானப் பணிக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகள் உடைக்கப்பட்டு பெரிய பெரிய லாரிகளில் கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிக எடைகொண்ட பாறாங்கற்களுடன் லாரிகள் பயணிப்பதால் சாலைகள் சேதமடைவதாகவும், பிற வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் அதானி நிறுவனத்திடம் கேரள அரசு அதிருப்தி தெரிவித்தது. அதனால், குமரியில் மலைகளை உடைத்து மிதவைக் கப்பல்கள் மூலம் விழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டது அதானி குழுமம். இதற்கு, விழிஞ்ஞத்திலிருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் உள்ள தேங்காப்பட்டணம் துறைமுகத்தைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

இதுபற்றி தேசிய மீனவர் சங்க மாநிலத் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், “பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் உபரிநீர் கடலில் கலக்கும் தேங்காப்பட்டினம் பகுதியில், தி.மு.க ஆட்சிக் காலத்தில் மீன்பிடித் துறைமுகத் திட்டம் கொண்டுவரப்பட்டது. கட்டுமானப் பணிகள் முழுமையடையாத நிலையில், பாறாங்கற்களைக் கொண்டுசெல்லும் திட்டத்தின் மூலம் அந்தத் துறைமுகத்தை நிர்மூலமாக்க முயற்சி செய்கிறார்கள். மிதவைக் கப்பல் வந்து செல்வதற்காக, துறைமுகத்தின் ஒரு பகுதியை உடைத்து அகலப்படுத்தப் போகிறார்களாம். துறைமுகத்தை ஆழப்படுத்திக் கப்பலைக் கொண்டுவரப்போகிறார்களாம். விசைப்படகுகள் வந்துசெல்லும் அளவுக்கான ஆழத்தில்தான் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இதை  இன்னும் ஆழப்படுத்தினால், கடல் அலையைக் கட்டுப்படுத்தும் தடுப்பணை உடைந்து துறைமுகமே அழிந்துவிடும். விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த எத்தனையோ மீனவர்கள், இங்கு கப்பல் மோதிப் பலியாகியுள்ளனர். அந்தக் கப்பல்கள் மீது ஒரு வழக்குகூட இதுவரை பதிவு செய்யப்படவில்லை. கடல் அரிப்பு காரணமாக, ஏற்கெனவே வள்ளவிளை சாலை கடலுக்குள் சென்றுவிட்டது. இனி 300 டன் கற்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் இங்கு வந்துசென்றால், கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளும் உடைந்து கடலுக்குள் விழுந்துவிடும்” என்றார் கவலையுடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

குறும்பனை பெர்லின், “விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்துக்கு, 2014-ம் ஆண்டு அனுமதி கொடுக்கப் பட்டது. 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்த கேரளா, தங்கள் மாநிலத்திலிருந்து ஒரு சிறு கல்லைக்கூட அந்தத் துறைமுகத்துக்காக எடுக்கக்கூடாது என நிபந்தனை விதித்தது. ஆயிரம் நாள்களில் பணியை முடிப்பதாகக் கூறினர். பாறாங்கற்கள் இல்லாததால், ஆயிரம் நாள்கள் தாண்டியும் பணி முழுமையடையாமல் முடங்கிக்கிடக்கிறது. முதற்கட்ட முயற்சியாக, கடலுக்கு அடியில் உள்ள மலைகளை உடைத்துக் கற்களை எடுக்க முயற்சி செய்தனர். மலைகளில் துளைபோட்ட போது, கொல்லம் கடற்கரையை ஒட்டியுள்ள 125 வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள், துறைமுகப் பணியை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தினர். அதனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைகளை நோக்கி அவர்கள் திரும்பினர். அதானி குழுமத்துக்காக தமிழக அரசு குமரி மாவட்டத்தையே இழக்கத் தயாராக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவிருந்தனர். நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேசவிரோதிகள் என மீனவர்களுக்குப் பட்டம் கொடுக்கிறார்கள்.

இப்போதும், தக்கலைப் பகுதியில் மலைகளை உடைத்துப் பாறாங்கற்களை விழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கொண்டுபோகிறார்கள்” என்று குமுறினார்.

கேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்!

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் பேசினோம். ‘‘மீன்வளத் துறை உதவி இயக்குநர், கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிறகு, மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசித்து அதை ரத்து செய்துவிட்டார்கள். துறைமுகம் மூலம் கற்களைக் கொண்டுசெல்லும் திட்டம் எதுவும் இல்லை. குமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு மணல் கொண்டுசெல்ல மட்டுமே தடை உள்ளது. சாலை வழியாக பொருள்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கக்கூடாது எனக் கேரளாவைச் சேர்ந்த சிலர் கோர்ட்டில் உத்தரவு வாங்கியுள்ளனர். அதனால், கடந்த நான்கு மாதங்களாக வேறுசில கட்டுமானங்களுக்காக அனுமதிக்கப்பட்ட அளவு பாறாங்கற்கள் போன்றவை கொண்டுசெல்லப்படுகின்றன. வேறு கட்டுமானங்கள் என்ற பெயரில் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்துக்குச் சாலை வழியாகக் கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதைக் கண்காணிக்கச் சொல்கிறேன்” என்றார் கலெக்டர்.

இதற்கிடையே தமிழக சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ‘கடல்வழியாக பாறாங்கற்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படாது’ என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி கொடுத்திருக்கிறார்.

- ஆர்.சிந்து
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism