Published:Updated:

நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா; கொன்னையூர் நாடு செலுத்துதல்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா;

கிராம மக்கள் ஈட்டி கம்புகளுடன் உடலில் சேறு, சகதியைப் பூசிக்கொண்டு நூதன முறையில் கொம்பு, பறை இசை வான வேடிக்கை மேளதாளங்கள் முழங்கக் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா; கொன்னையூர் நாடு செலுத்துதல்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிராம மக்கள் ஈட்டி கம்புகளுடன் உடலில் சேறு, சகதியைப் பூசிக்கொண்டு நூதன முறையில் கொம்பு, பறை இசை வான வேடிக்கை மேளதாளங்கள் முழங்கக் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

Published:Updated:
நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா;

புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா, பங்குனி உத்திரத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் கடந்த மாதம் மார்ச் 22 - ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 3 - ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி அன்ன, ரிஷப, குதிரை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா;
நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா;

தினமும், சிறப்பு அலங்கார, அபிஷேகமும் நடைபெற்றது. விழாவின், முக்கிய நிகழ்வான தோரோட்டத் திருவிழாவானது, ஏப்ரல் 11 - ம் தேதி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஒம் சக்தி, பராசக்தி, அரோகரா என்ற கோஷங்கள் முழங்க நார்த்தாமலை வீதிகளில் தேர் பவனி வந்தது. மாலை 3 மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னதாக, நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, பறவை காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் கோயிலை ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

புதுக்கோட்டையிலிருந்து நார்த்தாமலை வரையிலும் சாலையின் இருபுறங்களிலும், ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு நாள் மட்டும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது

கொன்னையூர் நாடு செலுத்துதல்
கொன்னையூர் நாடு செலுத்துதல்

புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 12 -ம் தேதி இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, அம்மனுக்குக் காப்பு கலைத்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு செலுத்துதல் விழா;

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நாடு செலுத்ததல் என்னும் நிகழ்வு புகழ்பெற்று விளங்குகிறது. கடந்த மார்ச் 20 - ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மார்ச் 21 - ம் தேதி அக்னிக் காவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 14 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்மனுக்குப் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து வழிபட்டனர்.

கொன்னையூர் நாடு செலுத்துதல்
கொன்னையூர் நாடு செலுத்துதல்

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா, நாடு செலுத்துதல் விழா நேற்று ஏப்ரல் 11 - ம் தேதி நடைபெற்றது. இதில், பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் ஈட்டி கம்புகளுடன் உடலில் சேறு, சகதியை பூசிக்கொண்டு நூதன முறையில் கொம்பு, பறை இசை வான வேடிக்கை மேள தாளங்கள் முழங்கக் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism