Published:Updated:

` வரதட்சணை கொடுத்துதான் என் மகள்களை மீட்க வேண்டுமா?' #LetsSpeakRelationship

``தார்மீக அடிப்படையில், அந்தப் பெண்ணின் வயதான பெற்றோர் கொடுத்த 2.5 லட்சம் ரூபாய் அவர்களையே சேரும்.''

indian currency
indian currency

நான், சிங்கப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவி தற்கொலை செய்துகொண்டார். தற்போது, என்னுடைய இரண்டு பெண்குழந்தைகளும் மாமனார்-மாமியார் கட்டுப்பாட்டில் வளர்கின்றனர். என் பிள்ளைகளைத் திரும்பக் கேட்டதற்கு, 'வரதட்சணைப் பணமான 2.5 லட்சம் ரூபாயைத் திரும்பக் கொடுத்துவிட்டு அழைத்துக்கொண்டு போங்க' என்று சொல்கிறார்கள். இப்போது நான் என்ன செய்யட்டும்?

- செந்தில், சிங்கப்பூர்

`` சட்டப்படி ஒருவரிடம் வரதட்சணை வாங்குவதும் ஒருவருக்கு வரதட்சணை தருவதும் குற்றமே. ஆனால், தார்மீக அடிப்படையில் அந்த பெண்ணின் வயதான பெற்றோர் கொடுத்த 2.5 லட்சம் ரூபாய், அவர்களையே சேரும்.

ஒருவேளை, நீங்கள் சட்டரீதியாக உங்கள் மகள்கள் இருவரையும் அவர்களிடமிருந்து பெற நினைத்தாலும் வரதட்சணைக் குற்றம் உங்களுக்குத் தடைக்கல்லாகவே இருக்கும்.

Relationship
Relationship

அதனால் அவர்களுடைய பணத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு, உங்கள் பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொள்வதைத் தவிர, இந்த விவகாரத்தில் சுமுகமான முடிவு வேறில்லை" - சுதா ராமலிங்கம், வழக்கறிஞர்

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship