Published:Updated:

"பேரறிவாளன் சிறையிலிருந்து செஞ்ச அந்த முயற்சிதான் அவர் விடுதலையாகக் காரணம் "- இரும்பொறை

இரும்பொறை

என்னோட விடுதலையை பெருசா கொண்டாடலை. அப்போ சேலம் சிறையில இருந்தோம். விடுதலைக்குப் பிறகு அறிவைப் பார்க்கப்போனேன். கம்பிக்கு வெளியே நான், அறிவு கம்பிக்குள்ள இருந்தார். கம்பிக்குள்ள இருக்கும் போதே என்னை கட்டிப் பிடிச்சி அழுதார். இரும்பொறை

"பேரறிவாளன் சிறையிலிருந்து செஞ்ச அந்த முயற்சிதான் அவர் விடுதலையாகக் காரணம் "- இரும்பொறை

என்னோட விடுதலையை பெருசா கொண்டாடலை. அப்போ சேலம் சிறையில இருந்தோம். விடுதலைக்குப் பிறகு அறிவைப் பார்க்கப்போனேன். கம்பிக்கு வெளியே நான், அறிவு கம்பிக்குள்ள இருந்தார். கம்பிக்குள்ள இருக்கும் போதே என்னை கட்டிப் பிடிச்சி அழுதார். இரும்பொறை

Published:Updated:
இரும்பொறை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், 31 வருடங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த மே 18-ம் தேதி வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. இந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் புதுக்கோட்டை மாவட்டம் செரியலூரைச் சேர்ந்த இரும்பொறையும் ஒருவர். இரும்பொறை, வழக்கிற்கு முன்பே பேரறிவாளனுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவரும் ஒன்றாக சில வருடங்கள் சிறையிலிருந்திருக்கிறார்கள். 2000ல் இரும்பொறை விடுதலையாகி சென்ற நிலையில், 31வருடங்களுக்குப் பிறகு பேரறிவாளன் சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறார்.

அந்த உற்சாகத்தில் இருந்த இரும்பொறையைச் சந்தித்துப் பேசினோம், " 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை ஆகியிருக்கிறார் எல்லாருக்கும் போலவே, ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால். அதற்கான போராட்டம் என்பது, 31 ஆண்டு காலமும் இடைவிடாது நடந்த போராட்டம். அதனுடைய விளைவுதான் இந்த விடுதலை. போராட்டம், பல கட்டங்களில், பல துறைகளில், பல நிலைகளில் நடந்திருந்தாலும், அதற்கு அடிப்படையாக, முதலில் விடுதலையான 19 பேருக்குத் தான் வெகுமக்கள் போராட்டமாக நடைபெற்றது.

"பேரறிவாளன் சிறையிலிருந்து செஞ்ச அந்த முயற்சிதான் அவர் விடுதலையாகக் காரணம் "- இரும்பொறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்பின்பு, மற்ற 7 பேர் விடுதலை என்பது குறிப்பிட்ட அளவிலான போராட்டமாக மட்டும்தான் இருந்தது. பெரும் போராட்டமாக இல்லை. பேரறிவாளன் விடுதலையைப் பொறுத்தவரை விடுதலைக்கான சட்டப்போராட்டத்தை முழுமையாக நடத்தியது, பேரறிவாளனும், அவரது வழக்கறிஞர்களும் தான். மற்றவர்களுக்கு அதில், பெரிய பங்கு இல்லை. ஆதரவாக பலரும் குரல் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவருடைய விடுதலைக்கான பெரும் பங்கு பேரறிவாளனையும், வழக்கறிஞர்களையும், அவரின் அம்மாவை மட்டும் தான் சேரும். பேரறிவாளன், சிறைக்குள் இருந்த காலம் முழுக்க தனது விடுதலைக்கான தயாரிப்புகளைத் தயார் செய்வதில்தான் முழு கவனம் செலுத்தினார். அம்மாவும் இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு, வாழ்க்கையில் என்றைக்கு நினைத்தாலும், துயரமான, அதே நேரம் வருத்தமளிக்கும், போராட்டம் வீரிட்டு எழுகிற மனநிலைதான் அப்போது எங்களுக்கு இருந்தது.

1998-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பினை நாங்கள், தீர்ப்பு என்று நாங்கள் பார்க்கவில்லை. சொன்ன நேரத்தில் துக்கம், துயரம் மட்டும் இருந்தது. ஆனால், அடுத்த நிமிடமே அதைக் கேலிக்கூத்தான விஷயமாகத் தான் எல்லாரும் பார்த்தோம். அந்தத் தீர்ப்பு பெரிதாக எங்களைத் தாக்கவில்லை.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒட்டு மொத்த பேருக்கும் ஒரே மாதிரியான தண்டனை கொடுத்த நிகழ்வு என்பது உலகத்தில் வேற எங்கும் நடக்காத ஒரு நிகழ்வு. ரஷ்யாவில் ஒருமுறை சார் மன்னர் ஆட்சிக்காலத்தில் வழக்கில் இருந்த அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்கிறது. அதன்பின்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மட்டும் தான், வழக்கில் எத்தனை பேர் சேர்த்திருந்தாங்களோ, அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்திருந்தாங்க. அது நீதியினுடைய தீர்ப்பு இல்லை. அது நெருக்கடியின் தீர்ப்பு.

பேரறிவாளன்
பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்த அத்தனை பேரின் குடும்பங்களுக்கும், நான், பேரறிவாளன் உட்பட எல்லாருடைய குடும்பங்களுக்கும் நெருக்கடி இருந்தது. என்னை முதலில் ஆதரவாளர் என்ற அடிப்படையில் வழக்கில் சேர்க்க நினைத்தனர். அவங்களால முடியலை. அவங்க வழக்கை முடிச்ச நிலையில் பிடிபட்டேன். அப்ப அவங்களுக்கு ஏற்பட்ட கோபத்தினால் மட்டும் தான் என்னைச் சேர்ந்தாங்க. "அறிவிக்கப்பட்ட குற்றவாளி சாந்தனுக்கு உதவி செய்தேன்" என்பதுதான் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. சாந்தனுக்குமே, "கொலை செய்தவரை பாதுகாத்தார் என்பதுதான் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. எங்களுக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீது 3 தடா வழக்குகள் பதிவு செஞ்சாங்க. எனக்கு மட்டுமில்லாமல், எனக்கு ஆதரவா இருந்த நண்பர்களைத் தடா வழக்கில் சம்பந்தப்படுத்தினாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறைக்குப் போறதுக்கு முன்னாடியே, எங்களுக்கு இடையே பழக்கம் இருந்துச்சு. பேரறிவாளன் என் உடன்பிறவாத தம்பி. அண்ணன்னுதான் என்னை அழைப்பார். நான் அறிவுன்னுதான் அவரை அழைப்பேன். குடும்ப ரீதியாகவும் எங்களுக்குள்ள பழக்கம் இருந்துச்சு.

ஒன்னும் சொல்லிக்காமலேயே பிரிஞ்சிட்டோம். இந்த நினைவு இத்தனை வருடங்கள் என்னைய தொல்லைப படுத்திக்கிட்டே இருந்துச்சு. இனிமே அந்த நினைவு என்னிடம் இருந்து விடுதலை ஆகும்.

இரும்பொறை
இரும்பொறை

இந்தத் தீர்ப்பினை வைத்து, மற்ற 6 பேரும் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதலில் நளினியை விடுதலை செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். பேரறிவாளனுடைய சட்ட முயற்சி முக்கியக் காரணமாக இருந்தாலும், அந்த சட்ட முயற்சி தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்துது மகிழ்ச்சியளிக்கிறது. அன்னைக்கு நான் வெளிய வந்தபோது, தங்குவதற்குன்னு ஒரு வீடு இருந்துச்சு. ஆனா, பலருக்கு தங்குவதற்குக்கூட வீடு இல்லாமல் தெருவில் நின்றவர்களும் உண்டு. ஊரில் எல்லாம் ஆரம்பத்தில் எனக்கு நெருக்கடி இருந்துச்சு. தற்போது, அது இல்லை.

இப்போ, விடுதலை ஆகியிருக்கிற பேரறிவாளனுக்காக நான் ஏதும், பெரிசா உதவி செய்யவில்லை. ஆனால், இனிமேல், அறிவோட சொந்த வாழ்க்கைக்கு, அடுத்து எடுக்கிற முயற்சிக்கு, அவர் கேக்கிற எந்த உதவிகளையும் செய்யத் தயராக இருக்கிறேன். 20 வருஷம் அறிவுக்கு உதவி செய்றதுக்காக வளர்ந்திருக்கிறேன். எனக்குக் கிடைச்ச பயனை அறிவுக்கும் கொடுப்பேன்" என்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism