Published:Updated:

பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்; களைகட்டிய திருமணம்!

கலைராஜன்- கெய்ல் தம்பதி

கெய்ல் என்ற மணமகளின் பெயர் கயல் என்று மாற்றப்பட்டு தமிழில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு, திருமணம் காரைக்குடியில் நடைபெற்றது.

பிரான்ஸ் பெண்ணை மணந்த காரைக்குடி இளைஞர்; களைகட்டிய திருமணம்!

கெய்ல் என்ற மணமகளின் பெயர் கயல் என்று மாற்றப்பட்டு தமிழில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு, திருமணம் காரைக்குடியில் நடைபெற்றது.

Published:Updated:
கலைராஜன்- கெய்ல் தம்பதி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். தங்கராஜின் மகன் கலைராஜன், பிரான்ஸ் கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் போது, அதே கல்லூரியில் படித்த பிரான்ஸ் நாட்டுப் பெண் கெய்ல் என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் தங்கள் பெற்றோரிடம், தாங்கள் காதலிக்கும் விஷயத்தைக் கூறிய நிலையில், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல், இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் கலைராஜன் - கெய்ல் இருவருக்கும் மணமகன் பிறந்த ஊரான அமராவதிபுதூரில் செப்டம்பர் 5ம் தேதி, திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கலைராஜன்- கெய்ல் தம்பதி
கலைராஜன்- கெய்ல் தம்பதி

அதன்படி, பிரான்ஸில் இருந்து கெய்லின் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் காரைக்குடி வந்தனர். கெய்ல் என்ற மணமகளின் பெயர் கயல் என்று மாற்றப்பட்டு தமிழில் பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் காரைக்குடியில் நடந்தது. திருமணத்தில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மணமக்களை வாழ்த்தினார். பிரான்ஸில் இருந்து கலந்துகொண்ட உறவினர்கள் வேட்டி, சேலை அணிந்திருந்தனர். வெளிநாட்டினர், உள்ளூர்க்காரர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி மணமகன் கலைராஜன் கூறும்போது,

" நம்ம ஊர் பண்பாடு, கலாசாரம் எல்லாம் அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. குறிப்பாக கெயில்க்கு நம்ம நாடு ரொம்பவே பிடிக்கும். தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய, எங்களவிட கெய்ல் குடும்பம் தான் ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. சொந்த ஊர்ல, நெனச்ச மாதிரி எங்க கல்யாணம் முடிஞ்சிருச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம் கலாசாரம், பாரம்பரிய பழக்கவழக்கங்களை எல்லாம் கெய்லுக்கு கத்துக்கொடுக்கணும்" என்கிறார் நெகிழ்ச்சியாக.