Published:Updated:

விபத்தில் மயங்கியவரின் ₹30,000 பணம்; நேர்மையாக ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ரூ. 30,000 பணம், செல்போன் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அருகிலேயே சிதறிக் கிடந்தன. அவற்றைப் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பாண்டியனின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

விபத்தில் மயங்கியவரின் ₹30,000 பணம்; நேர்மையாக ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

ரூ. 30,000 பணம், செல்போன் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அருகிலேயே சிதறிக் கிடந்தன. அவற்றைப் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பாண்டியனின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Published:Updated:
ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கோவிந்த நாயக்கபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (50). இவர் டூவிலரில் இலுப்பூரிலிருந்து கோவிந்த நாயக்கன்பட்டிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயமடைந்து மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, அந்த வழியில் சென்றவர்கள் இதுகுறித்து இலுப்பூர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட பணம் மற்றும் பொருள்கள்
மீட்கப்பட்ட பணம் மற்றும் பொருள்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தேவபாஸ்கரன், உதவியாளர் பூபதி ஆகியோர் காயமடைந்த பாண்டியனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே, மயக்கமடைந்து கிடந்த பாண்டியனின் அருகே ரூ. 30,000 பணம், செல்போன் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பாண்டியனின் செல்போன் மூலம் அவரின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியதோடு, அவர்களை வரவழைத்து ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து உறவினர்களை நெகிழ வைத்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

சரியான நேரத்தில் மீட்டதுடன், பணம், ஆவணங்களையும் நேர்மையாக ஒப்படைத்த ஆம்புலனஸ் பணியாளர்களை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.