Published:Updated:

ரூ.1 லட்சத்துக்கு ரூ.15,000 வட்டி, கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம்; முதலீட்டாளர்கள் தர்ணா!

முதலீட்டாளர்கள்

``எனக்கு 4 மாசம் வரைக்கும் சரியாக வட்டி வந்துச்சு. அதனால, ரெண்டு, மூணு பேருக்கிட்ட தகவல் சொல்லி அவங்களை முதலீடு செய்ய வச்சேன். ஆனா, இப்போ 6 மாசமாச்சு வட்டியும் வரலை. முதலீடும் கிடைக்கலை. தமிழகம் முழுவதுமே இவர்களை நம்பி லட்சக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர்."

ரூ.1 லட்சத்துக்கு ரூ.15,000 வட்டி, கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம்; முதலீட்டாளர்கள் தர்ணா!

``எனக்கு 4 மாசம் வரைக்கும் சரியாக வட்டி வந்துச்சு. அதனால, ரெண்டு, மூணு பேருக்கிட்ட தகவல் சொல்லி அவங்களை முதலீடு செய்ய வச்சேன். ஆனா, இப்போ 6 மாசமாச்சு வட்டியும் வரலை. முதலீடும் கிடைக்கலை. தமிழகம் முழுவதுமே இவர்களை நம்பி லட்சக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர்."

Published:Updated:
முதலீட்டாளர்கள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் மோசடி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, கீழ்ப்பாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஹிஜாவ் குரூப் ஆப் கம்பெனி, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.15,000 வரையிலும் வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செளந்தர்ராஜன் குழும தலைவராகவும், அவரின் மகன் அலெக்ஸாண்டர் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்திருக்கின்றனர். தமிழகம் முழுவதுமே இவர்களை நம்பி லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர்.

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள்

கடந்த ஏப்ரல் மாதம் முதலே முதலீடு செய்தவர்களுக்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டியைத் தராமல் இழுத்தடித்து வந்தவர்கள் தற்போது தலைமறைவாகியிருக்கின்றனர். இந்த நிலையில், பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்த நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள், புதுக்கோட்டை கடியாப்பட்டியில், நிறுவனர்களுக்குச் சொந்தமான காமதேனு சாய்பாபா கோயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிறுவனர்களை உடனே கைது செய்ய வேண்டும், எங்களது முதலீட்டுப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சிலரிடம் பேசினோம்,

``1 லட்சம் போட்டால், ரூ.15,000 வட்டி கொடுப்பதாகச் சொல்லி தான் நான் சேர்ந்தேன். துபாய், மலேசியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் எல்லாம் எண்ணெய்க் கிணறுகள், ரியல் எஸ்டேட் தொழில் இருப்பதாகச் சொன்னாங்க.

எனக்கு 4 மாசம் வரைக்கும் சரியாக வட்டி வந்துச்சு. அதனால, ரெண்டு, மூணு பேருகிட்ட தகவல் சொல்லி அவங்களை முதலீடு செய்ய வச்சேன். ஆனா, இப்போ 6 மாசமாச்சு வட்டியும் வரலை. முதலீடும் கிடைக்கலை. கோயில் எல்லாம் கட்டி அன்னதானம் போடுறாங்க. மக்களுக்கு சேவை செய்யிறாங்களேன்னு எல்லாம் விளம்பரம் எல்லாம் பார்த்தோம். நல்ல கம்பெனியா இருக்கு, கண்டிப்பா ஏமாற்ற மாட்டாங்கன்னு நெனச்சுதான், பணத்தை முதலீடு செஞ்சோம். ஆனால், சேவை செய்வது போல நாடகமாடி, இப்போ எல்லா பணத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடிட்டாங்க.

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள்

போதாக்குறைக்கு, கடைசியா இப்போ, ஏற்கெனவே இருந்த ஐ.டி லாக் ஆகிருச்சு. புதுசா ஐ.டி போடணும்னு சொல்லி இப்போ ஒரு வாரத்துக்குள்ள ரூ.100 லட்சம் வரைக்கும் அடிச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. இந்த நிறுவனத்தை நம்பி 1,25,000 பேர் வரையிலும் முதலீடு செய்திருக்கோம். சுமார் ரூ.10,000 கோடிக்கும் மேல முதலீடு பணம் செஞ்சிருப்போம். கணக்கு வழக்கு எல்லாம் இருந்த, இணையதளத்தை அக்டோபர் 31-ம் தேதி முடக்கிட்டாங்க. நாங்க எல்லாரும் ரொம்பவே மன உளைச்சலில் இருக்கோம். சிலர் விபரீத முடிவுகூட எடுக்கும் நிலைதான் இருக்குது. எனவே, தந்தை, மகன் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும்" என்றனர்.