Published:Updated:

குவியும் வெளியூர் வியாபாரிகள்; கோடிக்கணக்கில் வர்த்தகம்!புதுக்கோட்டையில் களைகட்டும் ஆட்டுச் சந்தை!

ஆட்டுச்சந்தை

வரும் 21-ம் தேதி தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் நடைபெறும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.2 கோடிக்கும் மேல், வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் ரொம்பவே பிரபலம். கடந்த ஒரு மாத காலமாகவே புரட்டாசி மாதம் என்பதால், ஆட்டுச்சந்தைக்கு குறைந்தளவிலான ஆடுகள் மட்டும் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டாததால், விவசாயிகள், வியாபாரிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

குவியும் வெளியூர் வியாபாரிகள்; கோடிக்கணக்கில் வர்த்தகம்!புதுக்கோட்டையில் களைகட்டும் ஆட்டுச் சந்தை!

ஒரு மாதமாகவே சந்தையில்  விற்பனை படு மந்தமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்,  புரட்டாசி மாதம் நிறைவடைந்து, ஜப்பசி தொடங்கிய நிலையிலும், வரும் 24-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையிலும், 17-ம் தேதி திங்கள்கிழமை  நடைபெற்ற சந்தை விற்பனையில் களைகட்டியது. புதுச்சேரி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதலே நடைபெற்ற இந்த சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் சிலரிடம் பேசியபோது,
``விராலிமலை பகுதி ஆடுகளுக்கு வெளியூர்களிலும் மவுசு அதிகம். குறிப்பாக, புதுச்சேரி பகுதிகளில் எங்க பகுதி ஆடுகளுக்கு மவுசு இருப்பதால், அங்குள்ள வியாபாரிகள் பலரும் விராலிமலை சந்தைக்கு வந்து ஆடுகளை அதிகமாக வாங்கிச் செல்வார்கள்.

ஆட்டுச் சந்தை
ஆட்டுச் சந்தை

இந்த வருடமும் அங்குள்ள வியாபாரிகள் பலரும் முதல் நாள் இரவே வந்து ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கில் ஆடுகளை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். இதேபோல், பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர். நாங்கள் கொண்டு வந்த பெரும்பாலான ஆடுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன" என்றார்.

இதேபோல், புதுக்கோட்டையில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையும் மாவட்டத்தின் மிகப்பெரிய சந்தையாகும். வரும் 21-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை யொட்டிய சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற இருக்கிறது. இந்தச் சந்தையிலும் சுமார் ரூ.2 கோடிக்கும் மேல், வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.