Published:Updated:

கேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது!

கேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது!
கேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது!

கேரளாவில் பெண் 'தாதா' குண்டர் சட்டத்தில் கைது!

கேரளாவில் முதன்முறையாக குண்டர் சட்டத்தில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பறவாபுழாவைச் சேர்ந்தவர் ஷோபா ஜான். இவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் இருந்து சிறுமியை விலைக்கு வாங்கி உள்ளார். அதன்பிறகு அந்தச் சிறுமியை கேரளாவின் முக்கிய பிரமுகர்களின் பாலியல் உறவுக்கு பயன்படுத்தி வந்தார். தொடர்ந்து பாலியல் கொடுமை அனுபவித்து வந்த அந்தச் சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து ஷோபா ஜான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், கொச்சி மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஷோபாஜானுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயச்சந்திரனுக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனையும்,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஷோபா ஜான் கேரளாவில் பெண் தாதாவாக செயல்பட்டுவந்துள்ளார். அவரின் கீழ் பல அடியாள்கள் இருந்துள்ளனர். இவர்மீது கேரளாவில் பல காவல் நிலையங்களில் 34 வழக்குகள் உள்ளன. இதில் 26 வழக்குகளில் ஷோபா ஜான்தான் முதல் குற்றவாளி. இதைத்தொடர்ந்து ஷோபா ஜானை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய கொச்சி போலீஸ் சூப்பிரண்ட் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் ஒப்புதலின் பேரில் ஷோபா ஜான் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைதுசெய்யப்பட்ட பெண் தாதா ஷோபாதான் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு