Published:Updated:

மாணவர்களைக் காப்பாற்ற 10 கிலோ வெடிகுண்டுடன் ஓடிய போலீஸ்காரர்!

போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் 400 மாணவர்கள் இருந்தபோது, மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வர,  அந்த வெடிகுண்டை மீட்ட போலீஸ்காரர் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவு  அதனை சுமந்து சென்று பாதுகாப்பான பகுதியில் வைத்தார். 

தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேல் என்பவர்தான் இந்த அசாத்தியச் செயலைச் செய்தது. இது தொடர்பாக தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு வெடிகுண்டைச் சுமந்து கொண்டு அவர் ஒடுவது போல காட்சிகள் பதிவாகியுள்ளன. உயிரைத் துச்சமென மதித்து குழந்தைகளைப் காப்பாற்ற போராடிய அபிஷேக் பட்டேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

அபிஷேக் பட்டேல் கூறுகையில், ''வெடிகுண்டை கண்டதும் எடுத்துக் கொண்டு என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ ஓடினேன். குழந்தைகள், வீடுகள் இல்லாத பகுதியை நோக்கி ஓடுவதே எனது குறிக்கோளாக இருந்தது'' என்றார். வெள்ளிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெடிகுண்டு வெடித்திருந்தால் ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். 500 மீட்டர் சுற்றளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.