Published:Updated:

'தேங்க்யூ இந்தியா' - நன்றி சொன்ன போஸ்ட் கார்டு!

'தேங்க்யூ இந்தியா' - நன்றி சொன்ன போஸ்ட் கார்டு!
'தேங்க்யூ இந்தியா' - நன்றி சொன்ன போஸ்ட் கார்டு!

'தேங்க்யூ இந்தியா' - நன்றி சொன்ன போஸ்ட் கார்டு!

மும்பை மாநகரம் வெள்ளத்தில் ஒரு வார காலமாக முடங்கிப் போனது. பரந்து விரிந்த மும்பையின் இதயத்துடிப்பான புறநகர் ரயில் சேவையை நிறுத்திக்கொண்டது. ரயில் நிலையங்களிலேயே மக்கள் கிடக்க வேண்டிய நிலை.  நடந்துகூட வீடு செல்ல முடியாது. ஏனென்றால், சாலைகளில் கழுத்தளவு வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது.

பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த எரி, அவரின் மனைவி, மூன்று மகள்களும் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தாதர் பகுதியில் ஹோட்டல்களில் அறைகள் கிடைக்கவில்லை. அப்போது, ஒருவர் 'தாதரில் உள்ள குருத்வாராவுக்குச் சென்று விடுங்கள்; உங்களைப் பார்த்துக் கொள்வார்கள் ' என நம்பிக்கை அளித்துள்ளார். எரியும் குடும்பத்தினரும் உயிரைக் கையில் பிடித்தவாரே தாதரிலிருந்த அந்தக்  குருத்வாராவை கண்டுபிடித்தனர். ஏற்கெனவே, அங்கே ஏராளமானோர் தங்கியிருந்தனர். 'இடம் கிடைக்குமா' என்கிற அச்சத்துடனேயே அணுகியுள்ளனர். குருத்வாரா கதவைத் தட்டியவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகுமா?.

அவர்களுக்குத் தனி அறை ஒதுக்கித் தரப்பட்டது. சுடச்சுட இரவு உணவும் வழங்கப்பட்டது. மழை குறைந்ததும் புதன்கிழமை காலையில் குருத்வாராவிலிருந்து அவர்கள் விடைபெற்றனர். செல்லும்போது, ஒரு சிறிய பொட்டலத்தை குருத்வாராவில் இருந்தவர்களிடம் கொடுத்துள்ளனர். திறந்துப் பார்த்தால் கொஞ்சம் பணம் இருந்துள்ளது. கூடவே ஒரு போஸ்ட் கார்டும் இருந்தது. அதில், ''மழையில் எல்லாவற்றையும் இழந்தோம். உங்கள் குருத்வாரா இருட்டில் வெளிச்சம் எங்களுக்கு கிடைத்தது. மிகுந்த கருணையுடன் நடந்துகொண்டீர்கள். எங்கள் வாழ்க்கையில் நேற்றைய இரவைத்தான்  மிகச்சிறந்த இரவாக கருதுகிறோம் தேங்க்யூ இந்தியா!'' என்று எழுதப்பட்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு