Published:Updated:

நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழக தொழில்துறையின் முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட 2 ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் முதன்மை செயலராக இருந்துவந்த  நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்., நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கான  முதன்மை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கான  முதன்மை செயலராக பணியாற்றி வந்த டி.கே. ராமசந்திரன் ஐ.ஏ.எஸ். பால் உற்பத்தி  மற்றும் வளர்ச்சி துறைக்கான நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

##~~##
அதே சமயம் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ் இதுவரை கவனித்து வந்த குறு,சிறு மற்றும்  நடுத்தர தொழில்துறையின் முதன்மை செயலர் பொறுப்பை, தமிழக அரசின் கூடுதல்  தலைமை செயலரான என். சுந்தர தேவன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தமிழக  அரசின் தலைமை செயலர் தேபேந்திர சாரங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.