Published:Updated:

விவாகரத்துக்கு 6 மாத காலஅவகாசம் தேவையில்லை!- உச்ச நீதிமன்றம் கருத்து

தினேஷ் ராமையா
விவாகரத்துக்கு 6 மாத காலஅவகாசம் தேவையில்லை!- உச்ச நீதிமன்றம் கருத்து
விவாகரத்துக்கு 6 மாத காலஅவகாசம் தேவையில்லை!- உச்ச நீதிமன்றம் கருத்து

'மனமொத்த விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு, ஆறு மாத கால அவகாசம் அளிக்கவேண்டியது கட்டாயமில்லை' என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 


இந்து திருமணச் சட்டத்தின் (1955) படி மனமொத்துப் பிரிய விரும்பி விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு, ஆறு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த நிலையில், விவாகரத்து கோரி தம்பதிகள் தொடுத்த வழக்கு ஒன்று, நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில், கடந்த  எட்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகவும், இனி சேர்ந்து வாழ சாத்தியம் இல்லை என்பதாலும் விவாகரத்தை விரைந்து வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.  

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''தம்பதிகள் இருவரும் மனமொத்து விவாகரத்து கோரும் நிலையில், ஆறு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இரு தரப்பும் விவாகரத்து கோரி மனுச் செய்து, ஒரு வார காலத்துக்குப் பின்னர், கால அவகாசத்தைக் குறைக்கக் கோரி தனியே மனு செய்யப்பட்டால், அதை நீதிமன்றங்கள் பரிசீலிக்கலாம். சூழல் மற்றும் உண்மைகளைக் கருத்தில்கொண்டு கால அவகாசத்தைக் குறைப்பதுகுறித்து விசாரணை நீதிமன்றங்கள் முடிவெடுக்கலாம்'' என்று கருத்து தெரிவித்துள்ளது.